Tuesday, 18 January 2011

ஈராக்கில் அமெரிக்கப் படைவீரர் சாவு

கடந்த திங்கட்கிழமை (17.01.2011) ஈராக்கின் வட பகுதியில் மற்றும் ஒரு அமெரிக்க வீரர் இறந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மரணம் குறித்த விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2010 ஆகஸ்டு மாதத்துடன் அமெரிக்கத் துருப்பினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், 'பயிற்சி மற்றும் 'ஆலோசனை வழங்கல்' எனும் போர்வையில் சுமார் 50,000 அமெரிக்கத் துருப்பினர் ஈராக்கில் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களின்போது மத்திய ஈராக்கில் மூன்ற அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, வட ஈராக்கில் ஒரு அமெரிக்க வீரர் படுகாயமடைந்துள்ளார்.

வாஷிங்டன்- பக்தாத் ஆளும் தரப்பினரிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைnhயன்றின் பிரகாரம் 2011 ஆம் ஆண்டு முடிவுக்குள் அமெரிக்கப் படை ஈராக்கிலிருந்து முற்றுமுழுதாக வாபஸ் வாங்கித் திரும்பிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை (17.01.2011) ஈராக்கின் வட பகுதியில் மற்றும் ஒரு அமெரிக்க வீரர் இறந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மரணம் குறித்த விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2010 ஆகஸ்டு மாதத்துடன் அமெரிக்கத் துருப்பினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், 'பயிற்சி மற்றும் 'ஆலோசனை வழங்கல்' எனும் போர்வையில் சுமார் 50,000 அமெரிக்கத் துருப்பினர் ஈராக்கில் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களின்போது மத்திய ஈராக்கில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, வட ஈராக்கில் ஒரு அமெரிக்க வீரர் படுகாயமடைந்துள்ளார்.

வாஷிங்டன்- பக்தாத் ஆளும் தரப்பினரிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையொன்றின் பிரகாரம் 2011 ஆம் ஆண்டு முடிவுக்குள் அமெரிக்கப் படை ஈராக்கிலிருந்து முற்றுமுழுதாக வாபஸ் வாங்கித் திரும்பிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 செய்தி:இந்நேரம்

No comments:

Post a Comment