Sunday, 24 April 2011

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் தனித் தொகுதிகளாக மாற்றம்

புதுடெல்லி:மேற்கு வங்காள மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித் தொகுதிகளாக மாறியது முஸ்லிம்கள் 25 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் 10 தொகுதிகளாகும். இவற்றில் ஆறு தொகுதிகள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளாகும். மூன்று தொகுதிகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

கீழ்க்கண்ட தொகுதிகள்தாம் அட்டவணைப்படுத்தப்பட்ட இனத்தவருக்கான தனித் தொகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன

62.2 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஸாகர்திகியும் இவற்றில் அடங்கும். இத்தொகுதியில் அட்டவணைப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் வெறும் 17.8 சதவீதமே வாழ்கின்றனர்.

கலிகஞ்ச் – 55 .6 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்

கார்க்ராம் – 51.3 சதவீதம் முஸ்லிம்கள்

கேதுக்ராம் – 44.5 சதவீதம் முஸ்லிம்கள்

ராஜாராஹத் – 41.3 சதவீதம் முஸ்லிம்கள்

பஸந்தி – 41.2 சதவீதம் முஸ்லிம்கள்

கல்பி – 36.3 சதவீதம் முஸ்லிம்கள்

நானூர் – 33.5 சதவீதம் முஸ்லிம்கள்

ஸாங்க்ரோ – 31.9 சதவீதம் முஸ்லிம்கள்

கேஷ்பூர் – 26.6 சதவீதம் முஸ்லிம்கள்

வெகுவிரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் 20 சதவீதத்திற்கு அதிகமாக முஸ்லிம்கள் வாழும் 7 தொகுதிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினருக்கான தனித் தொகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

நஜீபாபாத் – 49.2 சதவீதம் முஸ்லிம்கள்

நகீனா – 42.3 சதவீதம் முஸ்லிம்கள்

ஜான்ஸாத் – 36.6 சதவீதம் முஸ்லிம்கள்

கலீலாபாத் – 32.1 சதவீதம் முஸ்லிம்கள்

ஹாப்பூர் – 28.6 சதவீதம் முஸ்லிம்கள்

கோயில் – 26.8 சதவீதம் முஸ்லிம்கள்

மன்காபூர் – 18.1 சதவீதம் முஸ்லிம்கள் இத்தொகுதியில் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை 16.5 சதவீதம் மட்டுமே.

பீகார் மாநிலத்தில் முஸ்லிம்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் 6 தொகுதிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினருக்கான தனித்தொகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

ராணிகஞ்ச் – 28.7 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். இத்தொகுதியில் 21.3 சதவீதம் மட்டுமே அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் வசிக்கின்றனர்.

துராயி – 30 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.இத்தொகுதியில் 10.1 சதவீதம் மட்டுமே அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் வசிக்கின்றனர்.

கோராஹா – 37.3 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.இத்தொகுதியில் 14.2 சதவீதம் மட்டுமே அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் வசிக்கின்றனர்.

தர்பாங்கா – 26.4 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.இத்தொகுதியில் 13.1 சதவீதம் மட்டுமே அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் வசிக்கின்றனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளை தனி தொகுதிகளாக மாற்றியது, சட்டமன்றங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்ததற்கு காரணம் என சச்சார் கமிட்டி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

No comments:

Post a Comment