இந்த மாத நிகழ்வுகள்:
1.ஹிஜ்ரி 8ம் ஆண்டு மூத்தா போர் நடைபெற்றது. நிராகரிப்பாளர்களுக்கெதிராக நடந்த இந்தப் போரில் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்…) அவர்கள் கலந்துகொள்ளவில்லை. சிரியாவின் பிரபல நகரமான மூத்தாவில் இந்தப் போர் நடந்ததால் இதற்கு “மூத்தா போர்” என்று பெயர் வந்தது.ஹஸ்ரத் ஸெய்த் இப்னு ஹாரிதா (ரலி…) அவர்களை அண்ணலார் இந்தப் போருக்கு முதல் தளபதியாக நியமித்தார்கள்.
2. ஹஸ்ரத் காலித் இப்னு வலீத் (ரலி…) அவர்களை (இந்தப் போரின் நான்காவது தளபதி) “அல்லாஹ்வின் போர்வாள்களுள் ஒரு வாள்” என்று அண்ணலார் அழைத்தது இந்தப் போரில்தான்.
இந்த மாதத்தில் நடந்த திருமணங்கள்:
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்…) அவர்கள் அன்னை கதீஜா (ரலி…) அவர்களை நபித்துவத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார்கள். இவர்கள்தான் அண்ணலாரின் முதல் அன்பு மனைவி.
இந்த மாதத்தில் நடந்த மரணங்கள்:
1. அண்ணலாரின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் நபித்துவத்திற்கு 32 ஆண்டுகள் முன்பு மரணமெய்தினார்.
2. ஹிஜ்ரி 8ம் ஆண்டு மூத்தா போரில் ஹஸ்ரத் ஸெய்த் இப்னு ஹாரிதா (ரலி…) அவர்கள் ஷஹீதானார்கள்.
3.அதே போரில் ஹஸ்ரத் ஜஃபர் இப்னு அபீதாலிப் (ரலி…) அவர்கள் ஷஹீதானார்கள்.
4. அதே போரில் ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி…) அவர்கள் ஷஹீதானார்கள்.
5.ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு உத்மான் (ரலி…) அவர்கள் மரணமெய்தினார்கள்.
No comments:
Post a Comment