
சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ராஜினாமாவுக்காக தீவிரமாக போராடிவரும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல் அதிகரித்துவரும் வேளையில் தான் அல்ஜஸீராவின் பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.
ஆட்சியை அகற்ற முனையும் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை மேற்கொண்டதால் கோபமடைந்துள்ள யெமன் அதிகாரிகள் அல்ஜஸீராவின் சேனல் பெர்மிட்டை வாபஸ்பெற்றுள்ளனர்.யெமன் நாட்டின் சட்டங்களை அல்ஜஸீரா மீறியதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே கத்தர் நாட்டிலிருந்து தங்களின் தூதரை திரும்ப அழைத்துள்ளது யெமன். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்(ஜி.சி.சி) நாடுகள் முன்வந்து துவங்கவிருந்த மத்தியஸ்த பேச்சுவார்த்தையை நிராகரித்துவிட்ட யெமன் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு முன்னணியில் நின்ற கத்தரின் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டிலிருந்து தனது தூதரை திரும்ப அழைத்துள்ளது.
No comments:
Post a Comment