பாலக்காடு: கேரள மாநிலம் ஒற்றப்பாலம் மண்டலத் தலைவர் குஞ்ஞாப்பூ மரைக்காயர்(வயது 40) என்பவரை ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகாயப்படுத்தியது.
ஆல்டோ காரில் வந்த கும்பல் மரைக்காயர் பயணித்த பைக்கின் மீது இடித்து தள்ளி கீழே விழச் செய்துவிட்டு அவரை வெட்டியது. இன்று காலை 10 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடுமையாக காயமுற்ற இவரை திருச்சூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதித்துள்ளனர். இத்தாக்குதலுக்கு பின்னணியில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
No comments:
Post a Comment