Wednesday, 20 April 2011

சொஹ்ராபுதின் வழக்கில் சிறையில் இருக்கும் அதிகாரிக்கு தேர்வு எழுத அனுமதி

n.k.amin
அஹ்மதாபாத்:கடந்த 2005-ஆம் ஆண்டில் நடைபெற்ற சொஹ்ராபுதின் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் சிறையில் இருந்த காவல்துறை அதிகாரி N. K. அமீனிற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது.

அமீன் கடந்த 2007 ஆம் ஆண்டு பதினைந்து சக அதிகாரிகளுடன் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தேர்வு எழுதுவதற்காக இடைக்கால பிணை வேண்டுமென்று மனு அளித்திருந்தார். இம்மனுவை விசாரித்த  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி யாக்னிக் மனுவை தள்ளுபடி செய்து தேர்வு எழுத அனுமதியளித்து தீர்ப்பளித்தார்.

அமீன் சிறையில் இருந்துகொண்டே கணினியியல் படித்து வருகிறார். நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில்  அமீன் வருகின்ற 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை தனது வழக்குரைஞர் ஜகதீஷ் ரமணியின் அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரி முன்னிலையில் தேர்வு எழுதுவார் என தெரிவித்துள்ளது.

அமீன் கடந்த 2007 ஆம் ஆண்டு சொஹ்ராபுதின் மற்றும் அவருடய மனைவியை கடத்தி கொலை செய்ததற்காக கைது செய்யும் வரை காவல்துறை உதவி ஆணையராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment