Tuesday, 19 April 2011

சாதி நீதிமன்றங்களை இழுத்துமூடுங்கள் – உச்சநீதிமன்றம் உத்தரவு

SUPREME_COURT_8596f
புதுடெல்லி:கெளரவ கொலைகளை தீர்ப்பாக விதிக்கும் சட்டவிரோத சாதி நீதிமன்றங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இழுத்து மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெளரவக் கொலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மாவட்ட மாஜிஸ்ட்ரேட், போலீஸ் உயர் அதிகாரி ஆகியோரை சஸ்பெண்ட் செய்யவேண்டுமென நீதிபதிகளான் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.
இத்தகைய அதிகாரிகளுக்கெதிராக வழக்கு பதிவுச்செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்ற்ம உத்தரவிட்டது.

வேறுபட்ட இரு சாதியைச் சார்ந்த இளைஞனும், இளம் பெண்ணும் திருமணம் முடித்தால் அவர்களை கொலைச்செய்ய தீர்ப்பளிக்கும், அல்லது அதனை தூண்டும் சாதி நீதிமன்றங்கள் முற்றிலும் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

கொடூரமான, வெட்கக்கேடான கொலைகளை மட்டுமே இந்த நீதிமன்றங்கள் செய்துவருகின்றன என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

வட இந்தியாவில் மேல்ஜாதி ஹிந்து சமூகங்களிடையே ‘காப்’ பஞ்சாயத்துக்கள் என்று அழைக்கப்படு சாதி நீதிமன்றங்கள் அதிகமாக உள்ளன. சாதிவிட்டு திருமணம் செய்யும் நபர்களை கொலைச் செய்ய இத்தகைய நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. இக்கொலைகளை நிகழ்த்துபவர்களுக்கு வீரப்பட்டமும் வழங்கப்படும்.

வட இந்தியாவில் நூற்றுக்கணக்கான கெளரவக் கொலைகள் நடந்துள்ளன. உயர் கல்வி பயின்றவர்கள் கூட இத்தகைய கெளரவக் கொலைகளை செய்வதாக தேசிய மகளிர் கமிஷன் கண்டறிந்துள்ளது.

No comments:

Post a Comment