புதுடெல்லி:தலித்துகளை சாதிப் பெயர் கூறி அழைப்பது குற்றச்செயல் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் (தாழ்த்தப்பட்ட) மீதான தாக்குதல்கள் தடுப்புச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் இரண்டு பேரை தண்டித்த கீழ் நீதிமன்ற நடவடிக்கையை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்தது. இத்தகைய குற்றங்கள் தமிழ்நாட்டில் நிலவுகிறது.
அரசு இதனை தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால், தொடர்புடைய அதிகாரியையும், போலீஸையும் விசாரணைச் செய்யவேண்டுமென நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.
தலித் சமூகத்தைச் சார்ந்த பீனர் செல்வம், மஹாமணி ஆகியோரை சாதிப்பெயர் கூறி அழைத்து ஆட்சேபித்து தாக்குதல் நடத்திய வழக்கில் ஆறுமுகம் சேர்வை, அஜித்குமார் ஆகியோருக்கு மதுரை செசன்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்தது. சாட்சியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து இத்தண்டனை வழங்கப்பட்டது. இதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்யப்பட்டது.
சாதிப்பாகுபாடு நவீன சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
No comments:
Post a Comment