ஸன்ஆ:முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் தொடரும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யக்கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் தீவிரமடைந்துவரும் யெமன் நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு ஸாலிஹ் பதவி விலகுவதே என வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன.
பி.பி.சி செய்தி நிறுவனம் வளைகுடா நாடுகள் ஸாலிஹிடம் முன்வைத்த நிபந்தனைகளை கசியவிட்டுள்ளது. அதிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிச் செய்துவிட்டு துணை அதிபரிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வளைகுடா நாடுகள் வலியுறுத்தியிருந்தன.
இடைக்கால அரசை உருவாக்கிவிட்டு தேர்தலை நடத்த வேண்டுமெனவும் அந்த நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளது. துவக்கத்தில் வளைகுடா நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த ஸாலிஹ் தற்பொழுது அதனை வரவேற்றுள்ளதாக பி.பி.சி கூறுகிறது.
இதற்கிடையில் ஸன்ஆவில் அரசு எதிர்ப்பாளர்களை கலைந்துச் செல்ல ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment