Monday, 11 April 2011

மனித உரிமை மீறல்கள்:உபதேசிப்பதை நிறுத்து – அமெரிக்காவிடம் சீனா சாடல்

பீஜிங்:போலி மனித உரிமை மீறல்களை தூக்கிப்பிடித்துக் கொண்டு எங்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென சீனா அமெரிக்காவை கடிந்துள்ளது.

எவ்வித காரணமுமின்றி சீனா மனிதஉரிமை ஆர்வலர்களை சிறையிலடைப்பதாகவும், கருத்து சுதந்திரத்தை மறுப்பதாகவும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கை கூறுகிறது.

இதற்கு பதிலளித்துள்ள சீனா,பரஸ்பர ஒத்துழைப்புடனும், விழிப்புணர்வுடனும் பேச்சுவார்த்தைகளுக்கு முயல வேண்டுமே தவிர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை எதிர்ப்போம் என தெரிவித்துள்ளது. இதனை சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹோங்க் லீ தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாப்பது குறித்து சீன அரசுக்கு தெரியும். அன்றாடம் பொருளாதார வளர்ச்சியிலும், ஜனநாயக சட்டத்திட்டத்திலும் சீனா எல்லா பிரிவு மக்களுக்கும் முடிந்த அளவு சுதந்திரமும், உரிமைகளையும் அளித்துள்ளது. பிறருடைய மனித உரிமை மீறல்களைக் குறித்து உபதேசம் செய்யும் முன்பு அமெரிக்கா தனது நாட்டில் மனித உரிமைகளை உறுதிச்செய்ய வேண்டும் என ஹோங்க் லீ மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment