புதுடெல்லி:ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ள பிரபல மனித உரிமை ஆர்வலரும், மருத்துவருமான டாக்டர் பினாயக் சென்னின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
வழக்கின் விபரங்களை விளக்குவதற்கு வழக்கறிஞர்களுக்கு இரண்டு தினங்கள் அவகாசம் அளிக்க வேண்டுமென்ற சட்டீஷ்கர் அரசின் கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.
மாவோயிஸ்டுகளின் கடிதங்களை பரிமாறிக் கொண்டார் என குற்றஞ்சாட்டி சட்டீஷ்கர் நீதிமன்றம் பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை வழங்கியிருந்தது.
No comments:
Post a Comment