
புதுடெல்லி: கறுப்புப் பணவழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுக்கு ஆளான புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங்கை விசாரணைச்செய்ய அமலாக்கப் பிரிவு இயக்குநரகத்திற்கு பிரதமர் அலுவலகம் அனுமதியளித்துள்ளது.
கறுப்புப்பண வழக்கில் கைதான புனேவைச் சார்ந்த தொழிலதிபர் ஹஸன் அலியுடன் ஆளுநரின் தொடர்பு வெளியான சூழலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹஸன் அலிக்கு வெளிநாட்டு வங்கிகளில் எட்டு பில்லியன் டாலர் முதலீடு உள்ளதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு செய்ததற்காக ஹஸன் அலிக்கு அமலாக்கப்பிரிவு 70 ஆயிரம் கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பியது.
1997-ஆம் ஆண்டு இக்பால் சிங் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தபொழுது மனித நேய அடிப்படையில் ஹஸன் அலிக்கு பாஸ்போர்ட் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை கடிதம் அளித்திருந்தார்.
வெளிநாட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் சகோதரனை காண்பதற்கு ஹஸன் அலிக்கு அவசரமாக பாஸ்போர்ட் வழங்க வேண்டுமென்பதே இக்பால் சிங்கின் சிபாரிசு ஆகும்.
ஹஸன் அலியை தனக்கு நேரடியாக தெரியாது எனவும் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் பாண்டே கோரியதன் அடிப்படையில் சிபாரிசு கடிதம் அளித்ததாகவும் இக்பால் சிங் கூறியிருந்தார்.
ஹஸன் அலியுடன் நெருங்கிய தொடர்புடைய உ.பி.முதல்வர் மாயாவதியின் முதன்மை செயலாளர் வி.எஸ்.பாண்டேவை குற்றச்சாட்டுகள் எழுந்தைத் தொடர்ந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்தியர்களின் கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடுச் செய்யப்பட்டிருப்பதுக் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் விசாரித்து வருகிறது.
No comments:
Post a Comment