
கேரளாமாநிலம் நெடும்பாஞ்சேரியில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடியபோது அவர் இதனை தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தாவுக்கு எதிராக தீவிரமாக களமிறங்கியது பா.ஜ.க கட்சி. அதைப்போல 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஊழலின் வாசலை திறந்துவிட்டவர் பா.ஜ.க தலைவராகயிருந்த மறைந்த பிரமோத் மகாஜனவார்.
லோக்பால் மசோதா நிதர்சனமாக வேண்டும் என்பது பல வருட கோரிக்கையாகும். எல்லா அரசியல் கட்சிகளையும் உட்படுத்தி வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி இதனை பயனளிக்கும் வகையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள் தயாராகவே இருந்தன. ஆனால், அரசியல் கட்சிகளை நெருங்கவிடாமல் செய்துவிட்டனர் ஹஸாரேயின் உடனருந்தவர்கள். இவ்வாறு தேவகவுடா தெரிவித்தார்.
No comments:
Post a Comment