Tuesday, 31 May 2011

தொடர வேண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள்!

சில நாட்களுக்கு முன் பங்களாதேசில் நடந்த கிரிகெட் போட்டியில்,இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,இன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

மாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.
ஏற்கனவே நிச்சயித்தபடி சில முஸ்லிம்கள் கைது செய்யப்படுவார்கள் அதோடு பேச்சுவார்த்தை நிறுத்தப்படும். இதுதான் காலாகாலமாக நடந்து வரும் உண்மை.அதுமட்டும் இல்லை, காஷ்மீர் மக்களோடு நம் நாட்டு தலைவர்கள் எப்போதெல்லாம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களோ அப்போதும் குண்டு வெடிக்கும்.

ஆனால் என்று! மாவீரன் கர்கரே,  இதை எல்லாம் செய்தது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று கண்டுபிடித்தானோ!! அன்றுமுதல் நிறுத்தப்பட்டது இந்த குண்டுவெடிப்புகள்இன்று குண்டு வெடிப்புகள் இல்லாமல் அழகிய முறையில் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.  இந்த பேச்சு வார்த்தைகள் தொடரவேண்டும்!  இருநாடுகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்!இருநாட்டு மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்!

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்? நாம் நாட்டில்  ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை  விரும்பாத ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.மக்களிடம் இவர்களைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இவர்களை நாம் நாட்டை விட்டே ஒழித்து கட்டி மாவீரன் கர்கரேயின் ஆத்மா சாந்தி அடைய வழி செய்ய வேண்டும்!.

Monday, 30 May 2011

நல்லெண்ணையும் அதன் மருத்துவ குணமும்!!

*  நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.

எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

*  நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

*  நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம்.

நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

*  நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

*  நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

யூதர்களால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அச்சுறுத்தல்

ஒபாமாவின் இஸ்ரேலுக்கு எதிரான அண்மைய அறிவிக்கையால், யூதர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நார்வேவிலிருந்து வரும் ஆஃப்டன்போஸ்டன் (Aftenposten) பத்திரிக்கை  செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில் தான் யூதர்கள் அதிகம் வாழ்கிறார்கள். 2008 தேர்தலில் ஒபாமாவிற்கு 78 சதவீத அமெரிக்க வாழ் யூதர்களின் ஒட்டு கிடைத்துள்ளதாகவும் ஆனால் இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்சனையில் ஓபாமாவின் நிலைப்பாடு அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதால், பெரும் யூத நிறுவனங்கள் ஒபாமாவிற்கு அளித்து வரும் நிதி உதவியை நிறுத்திக் கொள்ளப் போவதாக மிரட்டி வருகிறார்கள் என்று அந்த பத்திரிக்கையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது.

 மேலும் அந்த கட்டுரையில் ஆஃப்கானிஸ்தான் தாலிபன்கள் போலவே யூதர்களும் அமெரிக்கா அதிபருக்கு எதிராக நடக்க ஆரம்பித்ததுள்ளனர் என்றும்,  இது 'யூத பயங்கரவாத' செயல் என்றும் கண்டித்துள்ளது.

இந்த கட்டுரைக்கு நோர்வேவில் உள்ள யூதர்களால் கடும் ஏதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆகவே அந்த பத்திரிக்கை "யூதர்களால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அச்சுறுத்தல்" என்ற தலைப்பை தனது வலைதளத்தில் "செல்வாக்குள்ள யூதர்களால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அச்சுறுத்தல்" என்று திருத்திப் பதித்துள்ளது

தான் யார் என்பதையே மறந்துவிட்ட பலஸ்தீன் கைதி

கான்யூனிஸ் நகரைச் சேர்ந்தவர் வதீ தம்மான். அவருக்கு வயது 30. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை இவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது. தற்போது தன்னுடைய தண்டனைக் காலத்தை ஏறத்தாழ பூர்த்திசெய்துள்ள நிலையில் உள்ள அவர், நஃப்ஹா பாலைவனச் சிறையில் இருந்து நெகேவ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

"இந்தப் பலஸ்தீன் இளைஞர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையின் காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னுடைய நிலைகுறித்து அவர் பலமுறை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியபோதும், அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை.

 எனவே, மிக நீண்ட காலமாக ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளான அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. பின்னர், அவர் தன்னைப் பற்றிய சுயபிரக்ஞையை இழந்தவரானார். மிகக் கடுமையான ஞாபகமறதியால் அவதியுற்ற அவரை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் எய்ஷல் சிறைச்சாலைக்கு மாற்றியது.

தான் யார் என்பதையே மறந்துபோய்விட்ட நிலையில் அவர் தற்போது வாழ்ந்து வருகிறார். தம்மானின் இன்றைய அவலநிலைக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் மிருகத்தனமான நடைமுறைகளும் மனிதாபிமானமற்ற அலட்சியப் போக்குமே காரணமாகும்" என 'ஹுஸாம்' எனும் சிறைக் கைதிகளுக்கான சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வதீ தம்மானின் தற்போதைய நிலை குறித்துக்கூறும் பலஸ்தீன் மனித உரிமைகள் அமைப்பு, "தன்னைச் சுற்றி இருப்பவர்கள் யாரையுமே அடையாளம் கண்டுகொள்ள முடியாதளவு அவர்  தன்னுடைய சுயபிரக்ஞையை முற்றாக இழந்துவிட்டார். குறைந்தபட்சம் தன்னுடைய குடும்பத்தவரைக்கூட அவரால் இனம்காண முடியவில்லை. ஆரம்பத்திலேயே அவருடைய நோய் நிலையைப் பற்றித் தெரிந்தும், அவரைக் குணப்படுத்துவதற்கான எந்த ஒரு சிகிச்சையும் வழங்காமல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம் புறக்கணித்தமை மிகப் பெரும் மனித உரிமை மீறலாகும்" என சுட்டிக்காட்டியுள்ளது.

ஒஸாமாவைக் காட்டிக் கொடுத்தது தலிபான் தலைவர் - மற்றொரு மர்ம திருப்பம்

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.

ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார்.

பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார்.முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பெற்றிருந்ததோடு முல்லா உமருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்பு நிபுணரான நெய்ல் டோய்ல் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ஒஸாமா கொல்லப்பட்டு விட்டதால் இங்கிலாந்து படைகளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என இங்கிலாந்து அதிபர் கேமரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.இந்தத் தகவல்களை மிர்ரர் என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார்.

முல்லா பராதர் தலிபான் அமைப்பைத் தொடங்கியவரில் ஒருவர்.முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பெற்றிருந்ததோடு முல்லா உமருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்பு நிபுணரான நெய்ல் டோய்ல் தெரிவித்துள்ளார். .தற்போது ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ஒஸாமா கொல்லப்பட்டு விட்டதால் இங்கிலாந்து படைகளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என இங்கிலாந்து அதிபர் கேமரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவல்களை மிர்ரர் என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஃபுளோடில்லா குழுவுக்கு ஆபத்து நேர்ந்தால் பான்கிமூன் பொறுப்பு

"எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் காஸாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவுக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்தால் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி-மூன் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என காஸா முற்றுகைக்கு எதிரான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில், காஸா கடற்பரப்பை முற்றுமுழுதாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இஸ்ரேலுடன் ஏற்படக்கூடிய பிரச்சினையைத் தவிர்க்குமுகமாக ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவினரை இப்பயணத்தில் இருந்து தடுத்துநிறுத்த உதவுமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் மத்தியதரைக் கடலை அடுத்துள்ள நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

"பான்-கி-மூனின் இந்தக் கோரிக்கையானது ஃப்ரீடம் புளோடில்லா- 2 மீது தாக்குதல் நடாத்த இஸ்ரேலை ஊக்குவிப்பதாகவும், அதன் கடற்கொள்ளையை நியாயப்படுத்துவதாகவுமே அமைந்துள்ளது" என்று மேற்படி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

"கடந்த வருடம் காஸாவை நோக்கிச் சென்ற புளோடில்லா-1 குழுவை சர்வதேச கடற்பரப்புக்கள் வைத்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, ஒன்பது மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்ததோடு, மேலும் பலரை படுகாயமடையச் செய்தது."

"இஸ்ரேலிய அடாவடித்தனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான இத்தகைய கோரிக்கைகள், சர்வதேச சட்டத்துக்குப் புறம்பானதாகும். சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அப்பாவிப் பலஸ்தீன் மக்களைத் துன்புறுத்தும் நியாயமற்ற காஸா முற்றுகையைத் துரிதமாக முடிவுக்குக் கொண்டு வருவதில் ஐ.நா.வும் முன்வர வேண்டும்" என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

"ஐரோப்பிய நாடுகளில் இருந்து புறப்படவுள்ள சுமார் 12 கப்பல்களில், ஐரோப்பிய நாட்டு அரசியல் பிரமுகர்கள் உட்பட சுமார் 1200 தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்" என மேற்படி அமைப்பு அறிவித்துள்ளது.

காஸா முற்றுகைக்கு எதிரான சர்வதேச அமைப்பு தன்னுடைய அறிக்கையின் இறுதியில், "மேற்படி பயணத்தில் பங்கேற்க உள்ளவர்கள் ஓர் உன்னதமான மனிதாபிமானப் பணிக்காகக் களமிறங்கியுள்ளனர். எனவே, அவர்களை அதிலிருந்துப் பின்வாங்கச் செய்யும் வகையில் அச்சுறுத்தல் விடுப்பதற்குப் பதிலாக, உரிய பாதுகாப்பும் ஊக்கமும் வழங்குவதே ஐ.நா. செயலாளர் நாயகம் போன்ற பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவருக்குத் தகுதியான செயலாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்:

பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார்.

காயல்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் அதிமுக அரசு அமைந்துள்ளதால் சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த 24ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். அப்போது தமிழகத்தில் இஸ்லாமிய திருமண கட்டாய பதிவு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் விலைகளை நிறுவனங்களே நிர்ணயிப்பதை மாற்றி மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்யவேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். முஸ்லிம் சமுதாய இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டினத்தைத் தொட்டுச் செல்லும் வகையில் கிழக்குக் கடற்கரை சாலையை அமைக்க வேண்டும்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் போது தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் என்று இல்லாமல் நிரந்தரமாக அங்கீகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.