எகிப்தில் அரசுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி பொதுமக்கள் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்களை எகிப்து நாடு முழுவதும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். முபாரக்கைத் தொடர்ந்து அங்கு ராணுவத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சுட்டுக் கொன்ற காவல்துறையினர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 23 பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக காவல்துறை அதிகாரி இப்ராஹிம் மோனம் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு அந்த அதிகாரிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மந்திரி ஹபீப் அட்லிக்கும் 12 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment