Saturday, 21 May 2011

உளவு, உளவியல் யுத்தத்தில் அமெரிக்கா !

OurUmmah: பாகிஸ்தான் குவாட்டா பிரதேசத்தில் ஐந்து ரஷ்சியர்களை பாகிஸ்தான் படைகள் சுட்டு கொன்றுள்ளது இந்த சம்பவம் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட இவர்கள் செச்சனியாவை சேர்ந்தவர்கள் என்றும் ஐந்து பேரில் மூவர் பெண்கள் என்றும் அவர்களில் ஒருவர் ஏழு மாத கற்பிணி தாய் என்றும் அந்த கற்பிணி பெண் மீது 12 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றது.

இவர்கள் சுட்டப்பட்ட பின்னரும் காயங்களுடன் உதவி கோரி கையால் சைகை காண்பித்த போதும் மீண்டும் கொல்லப்படும் வரை சுடப்பட்டுள்ளனர் இவர்களை சுட்டு கொன்றுள்ள பாகிஸ்தான் காவல் படை இவர்கள் அல் காயிதா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் தற்கொலை தாக்குதல் நடத்த வந்ததாகவும் இவர்களின் உடலில் குண்டுகள் கட்டப்பட்டு இருந்ததாகவும் ஆரம்பத்தில் தெரிவித்தது அந்த செய்தியை ரோயிட்டரும் தெரிவித்தது.

பின்னர் குவாட்டா பிராந்திய போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டவர்கள் தாம் கொண்டுவந்த குண்டு வெடித்ததால் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானில் சுதந்திர ஊடகங்களின் செய்திகளின் பிரகாரம் அந்த ஐந்து பேரும் எந்த ஆயுதமும் அற்ற நிராயுதபாணிகள் என்றும் அல் காயிதா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளதுடன் கொடூரமாக கொல்லபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளன.

சம்பவம் இடம்பெற்ற பகுதி மக்கள் நிராயுதபாணிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவிட்டு போலிஸ் போலியாக அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததாக தெரிவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர் இந்த போலீஸ் தாக்குதளை கண்டித்தும் நீதியான விசாரணை ஒன்றை நடத்துமாறும் கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை அந்த பகுதி மக்கள் நடத்தியுள்ளனர் இதை தொடர்ந்து குவாட்டா பிரதேச ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சூட்டு சம்பவம் தொடர்பாக கருத்துரைத்துள்ள பாகிஸ்தான் மனித உரிமை அமைப்புகள் இவ்வாறான சூட்டு சம்பவங்கள் பாகிஸ்தானில் மிகவும் அரிதாக நடக்கின்றது என்று தெரிவித்துள்ளன. அதேவேளை கடந்த 13 ஆம் திகதி பாகிஸ்தான் இராணுவ பயிற்சி அகடமி மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் 90 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டனர் இந்த தாக்குதல் பாகிஸ்தான் தாலிபான் உரிமை கோரியதாக தகவல்கள் தெரிவித்தன இந்த சம்பவத்தின் பின்னர் பாகிஸ்தான் படைகள் மத்தியில் போராளிகள் மீது இருந்துவந்த அனுதாபம் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை 90 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா மீது பாகிஸ்தான் மக்கள் , மற்றும் இராணுவதிற்கு இருந்த வெறுப்பு தற்போது திசை மாற்றப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த தாக்குதல் யாரால் நடத்தப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானை பொறுத்த வரையும் அரசாங்கமும் இராணுவ தலைமையும் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தாலும் பாகிஸ்தான் படைகள் பொதுவாக அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக அமெரிக்கா உறுதியாக நம்பிவருகின்றது இந்த சந்தர்பத்தில் பாகிஸ்தான் சாதாரண படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க உளவு அமைப்புகளின் கைங்கரியமாக இருக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவ தாக்குதல்களை விடவும் உளவாளிகளை அனுப்புவது   மிகவும் பயன் உள்ளவை என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறிவருகின்றமை குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment