Thursday, 26 May 2011

இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் மீதான வழக்கு ஒத்திவைப்பு

பிரபல இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் மீது தொடுக்கப்பட்ட வழக்குக்கான தீர்ப்பை அலஹபாத் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கில் ஸாகிர் நாயிக் அவர்களுக்குப் பிணை வழங்க ஜான்ஸியிலுள்ள நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தன் மீதான விசாரணைகளின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஸாகிர் நாயக் மீதான வழக்கு, ஜான்ஸியைச் சேர்ந்த மேலதிக நீதிபதியினால் அலஹபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.டீ.. காரே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து, மும்பாயில் உள்ள இஸ்லாமிய ஆய்வு நிறுவனத் தலைவர் ஸாகிர் நாயிக் அவர்களுக்கு ஜூன் மாதம் 1 ஆம் திகதிக்கு முன் நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு பிணை மறுப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அறிஞர் ஸாகிர் நாயிக் மீது 'அவர் ஜான்ஸி பிரதேசத்தில் சட்டவிரோதமாக இனவாதத்தைத் தூண்டும் வகையிலான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்' என்று எம்.யூ. கான் என்பவரால் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment