Tuesday, 24 May 2011

லிபியாவின் வான் பரப்பில் புதிய விமானங்கள் இணைகின்றது

OurUmmah: லிபியாவில் சர்வாதிகாரி கடாபிக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டங்கள் கந்த பெப்ரவரியில் பலம் பெற்றது கடாபி அதை கொடூரமாக ஒடுக்க முயன்றார் பல நூறு பொதுமக்கள் கடாபி படைகளால் கொல்லபட்டனர் நாடு பூராவும் மக்கள் எழுச்சி பெற்றனர். கடாபியும் மக்கள் எழுச்சியை பயங்கரவாதிகளின் எழுச்சி என்று வர்ணித்து மிகவும் மோசமான தாக்குதல்களை நடத்தி தொடர் படுகொலைகளை மேற்கொண்டார் இதை தொடர்ந்து சந்தர்பம் பார்த்திருந்த மேற்கு  ஐநா பாதுகாப்பு சபை ஊடாக கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி லிபியாவின் மக்களை பாதுகாக்க தேவையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான சட்டம் ஒன்றை பிறப்பித்தது பெற்றுக்கொண்டது.

இந்த சட்ட அனுமதி மூலம் லிபியாவின் விமானப்டை மற்றும் ஏனைய படைகள் மீதும் மற்ற நாடுகள் தாக்குதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. லிபியாவில் கடாபி படைகளுக்கு எதிரான விமான தாக்குதல்கள் ஆரம்பித்தன பிரான்ஸ் விமானபடை கடாபியின் பல இராணுவ டாங்கிகளை தாக்கி அழித்துள்ளதாகவும், கூட்டு விமான படை 110 ஏவுகணைகளை – Tomahawk cruise missiles- எவியுள்ளதாகவும் அறிவித்தது விரிவாக பின்னார் இரண்டு முறைகளில் தாக்குதல்கள் லிபியா மீது மேற்கொள்ளப்பட்டது ஒன்று நேட்டோ படைகள் தலைமையிலும் மற்றது மேற்கு நாடுகளின் தலைமையிலும் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

தற்போது லிபியாவின் போராளிகளின் கையில் லிபியாவின் ஒரு பகுதியும் கடாபியின் கையில் மறுபகுதியுமாக மாறி மாறி முன்னேறுவதும் பின்வாங்குவதுமான நிலை கடந்த மூன்று மாதங்களாக தொடர்கின்றது தெளிவாக சொல்வதானால் லிபியா ஒரு ஆப்கானாக மாறிவிட்டுள்ளது.

லிபியா மீது மேற்கின். மட்டுப்படுத்தபட்ட தாக்குதல்கள் தொடர்கின்றது லிபியா மக்களின் போராட்டத்தை ஆதரித்துள்ள இஸ்லாமிய இயக்கங்கள், நிறுவனங்கள் என்பன மேற்குலகம் இராணுவ ரீதியில் லிபியா மீது தலையிடுவதை பெரும்பாலும் ஏற்று கொள்ளவில்லை அதற்கு பிரதான காரணமாக மேற்கின் நிகழ்கால, கடந்த கால வரலாறு அமைந்துள்ளது.

மேற்கு லிபியாவின் மக்களை பாதுகாக்க களம் இறங்கியுள்ளதாக எந்த ஒரு சாதாரண சர்வதேச பார்வை கொண்ட மனிதனும் ஏற்றுகொள்ள தயாரில்லை அந்த அளவுக்கு மோசமான நடத்தையை கொண்டதுதான் இந்த மேற்கு நாடுகள் கடாபி கொலைகாரன் குற்றவாளி சர்வாதிகாரி என்று கூறும் மக்கள் மேற்கின் இராணுவ நடவடிக்கையை குற்றவாளி மீது பயங்கரவாதிகள் செய்யும் தாக்குதலாகத்தான் பார்க்கின்றனர்.

மேற்கு நாடுகளின் உளவு நிறுவனங்களில் களமாக மாறியுள்ள லிபியா மிகவும் மோசமான எதிர்காலம் நோக்கி நகர்ந்து வருகின்றது தற்போது லிபியாவில் பொருளாதார கஷ்டங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர் வறுமை வீடுகளின் கதவுகளை ஏற்கனவே தட்ட தொடங்கியுள்ளது.

தற்போது மேற்கு நாடுகளின் கூட்டு படை தாக்குதல்களை அதிகரித்துள்ளது கடாபியை குறிவைத்து பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது அவரின் மாளிகைகளையும் நிர்வாக மையங்களையும் நோக்கி தாக்குதல் இடம்பெற்றுள்ளது சில தினங்களுக்கு முன்னர் கடாபியின் கடற்படை கப்பல்கள் பல தாக்கி அழிக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் யுத்த ஹெலிகொப்டர்களையும் தாக்குதல்களில் மேற்கு கூட்டு படை புதிதாக இணைத்துள்ளது லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடிவரும் அமைப்பின் இராஜாங்க அலுவலகம் ஒன்று அமெரிக்காவில் திறக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒபாமா கடாபி பதவி நீங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியதன் பின்னர் பாரிய தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது கடந்த ஒருவாரகாலமாக மேற்கு நாடுகளின் கூட்டு படை லிபியா நோக்கிய புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றது.

மார்ச் மாத வீடியோகள்

No comments:

Post a Comment