Saturday, 21 May 2011

இஹ்வான்களின் அரசியல் கட்சி ‘இஸ்லாம் தான் தீர்வு’ என்ற சுலோகத்தை நீக்கியுள்ளது

OurUmmah: எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தான் உருவாக்கியுள்ள சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சியின் “Islam is the solution” ‘இஸ்லாம் தான் தீர்வு’ என்ற சுலோகத்தை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது அதற்கு பதிலாக ‘சுதந்திரம்தான் தீர்வு நீதி அமுலுக்குரியது  ’“Freedom is the solution and justice is the application” என்ற சுலோகத்தை அறிவித்துள்ளது.

இஹ்வானுல் முஸ்லிமீனும் சிவில் சமூகமும் என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கி ஒன்றில் உரையாற்றியுள்ள அந்த அமைப்பின் ஒரு தலைவரான ஹில்மி அல் கஸார் என்பவர் இதனை தெரிவித்துள்ளார் அங்கு மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் எகிப்தை தான் விரும்பியது போன்று நிர்வாகம் செய்யமுடியாது, எந்த ஒரு அமைப்பும் எகிப்தின் பிரச்சினைகளை தமது விருப்படி கையாள முடியாது என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர்.. இஹ்வானுல் முஸ்லிமீன் நீதித்துறையின் கண்காணிப்பின் கீழும், தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தையும் , ஒரு சட்ட யாப்பையும் கொண்ட ஒரு புதிய அபிவிருத்தி அடைந்த நாட்டின் அவசர தேவையை வேண்டுகின்றது என்றும்  தெரிவித்துள்ளார்.

அதேவேளை சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சியின் உப தலைவராக ஒரு கிறிஸ்தவரை நியமித்துள்ளதுடன்  978 பெண் உறுப்பினர்களையும் 93 கொப்டிக் கிறிஸ்தவ சிறுபான்மையினரையும் உறுப்புரிமை பட்டியலில் இணைத்துள்ளது அதன் உப தலைவராக ரபிக் ஹபீப் என்ற  கொப்டிக் கிறிஸ்தவர் தெரிவுசெய்யபட்டுள்ளார்.

அதேவேளை கட்சியின் உறுப்புரிமையில் 15 வீதத்தை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க உறுப்பினர்கள் அல்லாத கிறிஸ்தவர்களுக்கும் , ஏனையவர்களுக்கும் வழங்கியுள்ளது ஆனால் கிறிஸ்தவர்களும் , பெண்களும் ஜனாதிபதி வேட்பாளராக விண்ணப்பித்தால் அதை கட்சி நிராகரிக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

ஆனாலும் தமது கட்சி அல்லாத கிறிஸ்த சிறுபான்மையினர் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதை கட்சி எதிர்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 அண்மையில் செய்தியாளர் மாநாடொன்றில் இஹ்வானுல் முஸ்லிமீன் தாம் புதிதாக உருவாக்கியுள்ள சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சியின் நலன் கருதி அமைப்பு தனது பிரதான நோக்கத்தை கைவிடாது என்று அதன் உபதலைவர் பொறியலாளர் ஹைராத் அல் சாதார் தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment