
திங்கள் கிழமை மாலை 5.30 மணிக்கு தன்னுடைய துணைவியார் ராஜாத்தி அம்மாள் மற்றும் திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோருடன் கருணாநிதி திகார் சிறைச்சாலைக்கு வந்தார். அப்போது கனிமொழியின் கணவர் அரவிந்தனும் உடன் இருந்தார்.
கருணாநிதியுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் திகார் சிறைக்கு வந்தனர். ஆனால் அவர்கள் சிறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் செல்லவில்லை.
சுமார் ஒரு மணி நேரம் மகள் கனிமொழியுடன் உரையாடிய கருணாநிதி, பின்னர் மத்திய தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரையும் சந்தித்தார்.
திகார் சிறை சென்று வந்த பின் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார். திங்கள் கிழமை காலையில் இருந்து மாலை வரை டெல்லியில் இருந்த கருணாநிதி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லை.
வழக்கமாக மஞ்சள் துண்டு அணிந்து வரும் கருணாநிதி மஞ்சளைத் துறந்து வெள்ளைக்கு மாறியிருந்தார்.
No comments:
Post a Comment