2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் உள்ள திகார் சிறையின் 10 அடிக்கு 15 அடி அளவுள்ள அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன் பிணை கோரி கனிமொழி தாக்கல் செய்திருந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து திகார் சிறையின் பெண் அதிகாரி ஒருவர் கனிமொழியைத் திகார் சிறையின் செல் எண் 6க்கு அழைத்துச் சென்றார்.
பாட்டியாலா இல்லத்திலிருந்து கனிமொழியை அழைத்துச் செல்வதற்காக பெண் காவலர்கள் வந்திருந்தனர். ஒரு பெண் காவலர் கனிமொழியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
"கனிமொழி அடைக்கப்பட்டுள்ள அறை 10 அடி அகலமும் 15 அடி நீளமும் உடையதாகும். அந்த அறையில் மின் விசிறி உண்டு. கனிமொழிக்குத் தொலைக்காட்சிப் பெட்டியும் வழங்கப்படும். நாள்தோறும் அவருக்கு நாளிதழ்களும் வழங்கப்படும்" என்று திகார் சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment