Monday, 23 May 2011

பாபர் மசூதி இடிப்புக்கு நிதியுதவி செய்தவர்கள் குறித்து விசாரிக்க சி.பி.ஐ முடிவு

கடந்த 1992, டிசம்பர்-6 அன்று உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி,ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் முக்கியத்தலைவர்களின் ஒப்புதலுடன் கரசேவர்களால் தகர்க்கப்பட்டது. இதற்காக நிதியுதவி செய்த 10 பேர் குறித்து சிபிஐ விசாரிக்க முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த வாரம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, பாபர் மசூதி இடிப்புக்கு நிதியுதவி செய்தவர்கள் குறித்த விபரங்களைத் திரட்டமுடியாததால், இவ்வழக்கில் மேலும் புதிய வழக்குகளைப் பதிவு செய்யமுடியவில்லை என்பதால், சாட்சிகள் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள நிகழ்வுகள் அடிப்படையில் இது குறித்து விசாரிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.


ராமர் கோவில் கட்டுமாணப்பணிக்காக வசூலிக்கப்பட்ட நிதி விபரங்கள், அனுப்பியவர்கள், அனுப்பிய முறைகள் மற்றும் அவை முறையாக கணக்கில் பதியப்பட்டனவா என்பவை குறித்து விரிவான விசாரண நடத்த உள்ளதாக சி.பி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment