Tuesday, 31 May 2011

தொடர வேண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள்!

சில நாட்களுக்கு முன் பங்களாதேசில் நடந்த கிரிகெட் போட்டியில்,இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,இன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

மாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.
ஏற்கனவே நிச்சயித்தபடி சில முஸ்லிம்கள் கைது செய்யப்படுவார்கள் அதோடு பேச்சுவார்த்தை நிறுத்தப்படும். இதுதான் காலாகாலமாக நடந்து வரும் உண்மை.அதுமட்டும் இல்லை, காஷ்மீர் மக்களோடு நம் நாட்டு தலைவர்கள் எப்போதெல்லாம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களோ அப்போதும் குண்டு வெடிக்கும்.

ஆனால் என்று! மாவீரன் கர்கரே,  இதை எல்லாம் செய்தது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று கண்டுபிடித்தானோ!! அன்றுமுதல் நிறுத்தப்பட்டது இந்த குண்டுவெடிப்புகள்இன்று குண்டு வெடிப்புகள் இல்லாமல் அழகிய முறையில் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.  இந்த பேச்சு வார்த்தைகள் தொடரவேண்டும்!  இருநாடுகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்!இருநாட்டு மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்!

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்? நாம் நாட்டில்  ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை  விரும்பாத ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.மக்களிடம் இவர்களைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இவர்களை நாம் நாட்டை விட்டே ஒழித்து கட்டி மாவீரன் கர்கரேயின் ஆத்மா சாந்தி அடைய வழி செய்ய வேண்டும்!.

Monday, 30 May 2011

நல்லெண்ணையும் அதன் மருத்துவ குணமும்!!

*  நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.

எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

*  நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

*  நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம்.

நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

*  நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

*  நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

யூதர்களால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அச்சுறுத்தல்

ஒபாமாவின் இஸ்ரேலுக்கு எதிரான அண்மைய அறிவிக்கையால், யூதர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நார்வேவிலிருந்து வரும் ஆஃப்டன்போஸ்டன் (Aftenposten) பத்திரிக்கை  செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில் தான் யூதர்கள் அதிகம் வாழ்கிறார்கள். 2008 தேர்தலில் ஒபாமாவிற்கு 78 சதவீத அமெரிக்க வாழ் யூதர்களின் ஒட்டு கிடைத்துள்ளதாகவும் ஆனால் இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்சனையில் ஓபாமாவின் நிலைப்பாடு அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதால், பெரும் யூத நிறுவனங்கள் ஒபாமாவிற்கு அளித்து வரும் நிதி உதவியை நிறுத்திக் கொள்ளப் போவதாக மிரட்டி வருகிறார்கள் என்று அந்த பத்திரிக்கையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது.

 மேலும் அந்த கட்டுரையில் ஆஃப்கானிஸ்தான் தாலிபன்கள் போலவே யூதர்களும் அமெரிக்கா அதிபருக்கு எதிராக நடக்க ஆரம்பித்ததுள்ளனர் என்றும்,  இது 'யூத பயங்கரவாத' செயல் என்றும் கண்டித்துள்ளது.

இந்த கட்டுரைக்கு நோர்வேவில் உள்ள யூதர்களால் கடும் ஏதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆகவே அந்த பத்திரிக்கை "யூதர்களால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அச்சுறுத்தல்" என்ற தலைப்பை தனது வலைதளத்தில் "செல்வாக்குள்ள யூதர்களால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அச்சுறுத்தல்" என்று திருத்திப் பதித்துள்ளது

தான் யார் என்பதையே மறந்துவிட்ட பலஸ்தீன் கைதி

கான்யூனிஸ் நகரைச் சேர்ந்தவர் வதீ தம்மான். அவருக்கு வயது 30. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை இவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது. தற்போது தன்னுடைய தண்டனைக் காலத்தை ஏறத்தாழ பூர்த்திசெய்துள்ள நிலையில் உள்ள அவர், நஃப்ஹா பாலைவனச் சிறையில் இருந்து நெகேவ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

"இந்தப் பலஸ்தீன் இளைஞர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையின் காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னுடைய நிலைகுறித்து அவர் பலமுறை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியபோதும், அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை.

 எனவே, மிக நீண்ட காலமாக ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளான அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. பின்னர், அவர் தன்னைப் பற்றிய சுயபிரக்ஞையை இழந்தவரானார். மிகக் கடுமையான ஞாபகமறதியால் அவதியுற்ற அவரை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் எய்ஷல் சிறைச்சாலைக்கு மாற்றியது.

தான் யார் என்பதையே மறந்துபோய்விட்ட நிலையில் அவர் தற்போது வாழ்ந்து வருகிறார். தம்மானின் இன்றைய அவலநிலைக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் மிருகத்தனமான நடைமுறைகளும் மனிதாபிமானமற்ற அலட்சியப் போக்குமே காரணமாகும்" என 'ஹுஸாம்' எனும் சிறைக் கைதிகளுக்கான சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வதீ தம்மானின் தற்போதைய நிலை குறித்துக்கூறும் பலஸ்தீன் மனித உரிமைகள் அமைப்பு, "தன்னைச் சுற்றி இருப்பவர்கள் யாரையுமே அடையாளம் கண்டுகொள்ள முடியாதளவு அவர்  தன்னுடைய சுயபிரக்ஞையை முற்றாக இழந்துவிட்டார். குறைந்தபட்சம் தன்னுடைய குடும்பத்தவரைக்கூட அவரால் இனம்காண முடியவில்லை. ஆரம்பத்திலேயே அவருடைய நோய் நிலையைப் பற்றித் தெரிந்தும், அவரைக் குணப்படுத்துவதற்கான எந்த ஒரு சிகிச்சையும் வழங்காமல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம் புறக்கணித்தமை மிகப் பெரும் மனித உரிமை மீறலாகும்" என சுட்டிக்காட்டியுள்ளது.

ஒஸாமாவைக் காட்டிக் கொடுத்தது தலிபான் தலைவர் - மற்றொரு மர்ம திருப்பம்

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.

ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார்.

பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார்.முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பெற்றிருந்ததோடு முல்லா உமருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்பு நிபுணரான நெய்ல் டோய்ல் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ஒஸாமா கொல்லப்பட்டு விட்டதால் இங்கிலாந்து படைகளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என இங்கிலாந்து அதிபர் கேமரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.இந்தத் தகவல்களை மிர்ரர் என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார்.

முல்லா பராதர் தலிபான் அமைப்பைத் தொடங்கியவரில் ஒருவர்.முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பெற்றிருந்ததோடு முல்லா உமருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்பு நிபுணரான நெய்ல் டோய்ல் தெரிவித்துள்ளார். .தற்போது ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ஒஸாமா கொல்லப்பட்டு விட்டதால் இங்கிலாந்து படைகளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என இங்கிலாந்து அதிபர் கேமரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவல்களை மிர்ரர் என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஃபுளோடில்லா குழுவுக்கு ஆபத்து நேர்ந்தால் பான்கிமூன் பொறுப்பு

"எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் காஸாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவுக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்தால் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி-மூன் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என காஸா முற்றுகைக்கு எதிரான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில், காஸா கடற்பரப்பை முற்றுமுழுதாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இஸ்ரேலுடன் ஏற்படக்கூடிய பிரச்சினையைத் தவிர்க்குமுகமாக ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவினரை இப்பயணத்தில் இருந்து தடுத்துநிறுத்த உதவுமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் மத்தியதரைக் கடலை அடுத்துள்ள நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

"பான்-கி-மூனின் இந்தக் கோரிக்கையானது ஃப்ரீடம் புளோடில்லா- 2 மீது தாக்குதல் நடாத்த இஸ்ரேலை ஊக்குவிப்பதாகவும், அதன் கடற்கொள்ளையை நியாயப்படுத்துவதாகவுமே அமைந்துள்ளது" என்று மேற்படி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

"கடந்த வருடம் காஸாவை நோக்கிச் சென்ற புளோடில்லா-1 குழுவை சர்வதேச கடற்பரப்புக்கள் வைத்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, ஒன்பது மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்ததோடு, மேலும் பலரை படுகாயமடையச் செய்தது."

"இஸ்ரேலிய அடாவடித்தனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான இத்தகைய கோரிக்கைகள், சர்வதேச சட்டத்துக்குப் புறம்பானதாகும். சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அப்பாவிப் பலஸ்தீன் மக்களைத் துன்புறுத்தும் நியாயமற்ற காஸா முற்றுகையைத் துரிதமாக முடிவுக்குக் கொண்டு வருவதில் ஐ.நா.வும் முன்வர வேண்டும்" என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

"ஐரோப்பிய நாடுகளில் இருந்து புறப்படவுள்ள சுமார் 12 கப்பல்களில், ஐரோப்பிய நாட்டு அரசியல் பிரமுகர்கள் உட்பட சுமார் 1200 தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்" என மேற்படி அமைப்பு அறிவித்துள்ளது.

காஸா முற்றுகைக்கு எதிரான சர்வதேச அமைப்பு தன்னுடைய அறிக்கையின் இறுதியில், "மேற்படி பயணத்தில் பங்கேற்க உள்ளவர்கள் ஓர் உன்னதமான மனிதாபிமானப் பணிக்காகக் களமிறங்கியுள்ளனர். எனவே, அவர்களை அதிலிருந்துப் பின்வாங்கச் செய்யும் வகையில் அச்சுறுத்தல் விடுப்பதற்குப் பதிலாக, உரிய பாதுகாப்பும் ஊக்கமும் வழங்குவதே ஐ.நா. செயலாளர் நாயகம் போன்ற பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவருக்குத் தகுதியான செயலாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்:

பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார்.

காயல்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் அதிமுக அரசு அமைந்துள்ளதால் சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த 24ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். அப்போது தமிழகத்தில் இஸ்லாமிய திருமண கட்டாய பதிவு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் விலைகளை நிறுவனங்களே நிர்ணயிப்பதை மாற்றி மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்யவேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். முஸ்லிம் சமுதாய இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டினத்தைத் தொட்டுச் செல்லும் வகையில் கிழக்குக் கடற்கரை சாலையை அமைக்க வேண்டும்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் போது தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் என்று இல்லாமல் நிரந்தரமாக அங்கீகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுவன்

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் புதிய சாதனை படைத்துள்ளான்.

உலகின் மிகப்பெரிய சிகரம் என அழைப்படுவது ஹிமாலய மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரம்(8850 அடி உயரம்). இங்கிலாந்தின் லண்டன் நகரில் சர்பிடான் பகுதியைச் சேர்ந்த அட்கின்ஸான்(16) என்ற பள்ளி மாணவர் நேபாள், சீனா, இங்கிலாந்து மலையேற்றக் குழுவினருடன் திபெத் பகுதியிலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணம் மேற்கொண்டான் 28.05.2011 அன்று வெற்றிகரமாக எவெரஸ்ட் சிகரத்தை அடைந்ததாக மலையேற்றக்குழுவின் இணையதளம் செய்தி‌ வெளியிட்டுள்ளது.

 முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜானிகொலிஸ்ன்(17) சிறுவன் தான் இந்த சாத‌னையை எட்டியிருந்தார். அவரது சாதனையை அட்கின்ஸான்(16) முறியடித்துள்ளான்.

மேலும் இன்னும் மூன்று நாட்களில் இவர் தனது 17வது வயதினை கொண்டாட உள்ளார். அதற்கு முன்னதாகவே 16 வயதில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.முதன்முதலாக கடந்த 2005ம் ஆண்டு ஆப்ரிக்காவில் உள்ள கிளிமஞ்சரோ மலையில் ஏறி தனது மலையேற்ற பயிற்சி துவக்கினான். இதுவரை 6 மலை சிகரங்களில் ஏறி சாதனை படைத்த அட்கின்ஸான் 7வதாக எவ‌ரஸ்ட் சிகரத்தை அடைந்து இந்த சாதனையை படைத்துள்ளான்.

எத்தனை காலம்தான் "ஏமாற்றுவார்" இந்த நாட்டிலே!!

 சத்தீஷ்கார் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.5-க்கு 1 கிலோ பருப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. அந்த தொடக்க விழாவில் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

அந்த விழாவில் பேசிய நிதின் கட்காரி, உலக அளவில் தீவிரவாதம் வளர்ந்து வருவதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

சிந்திக்கவும்: இந்திய தீவிரவாதிகள் உலக தீவிரவாதம் குறித்து பேசுகிறார்கள். இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களின் பின்னணியிலும் இருந்து செயல்பட்டது இந்த ஹிந்துத்துவா இயக்கங்களே.

மக்கா மஸ்ஜித் முதல் மலேகன் வரை, "இந்தியா முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு" இவர்கள் தீவிரவாதம் பற்றி பேசுகிறார்கள். "மதத்தை வைத்து அரசியல் நடத்த" இந்த பாரதிய ஜனதாகட்சி இந்தியா முழுவதும் நடத்திய கலவரங்கள் எத்தனை? எத்தனை?

இதன் மூலம் கொல்லப்பட்ட அப்பாவி சிறுபான்மை மக்கள் பல்லாயிரக்கணக்கில். இந்தியாவில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளின் ஊற்று கண்களாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளாகிய பாரதிய ஜனதா பார்ட்டி,

விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ராங்க்தல், அகிலபாரதிய வித்யாதி பரிஷத், இந்து முன்னணி, ஹிந்து சுயம் சேவக் சங்க், துர்க்கா வாகினி, ஆகிய அமைப்புகள் இருந்து செயல்பட்டு வந்தன.

இப்படிப்பட்ட பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி, இவர்கள் சொல்கிறார்கள் வளர்ந்து வரும் உலக தீவிரவாததிற்கு எதிராக ஒன்று பட்டு போராடவேண்டும் என்று.

வேடிக்கையாக இருக்கிறது, இந்திய தீவிரவாதத்தின் தலையாக இருந்து செயல்படுபவர்கள் உலக தீவிரவாதத்தை பற்றி பேசுகிறார்கள். இந்தியாவில் வளர்ந்து வரும் இவர்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

இந்நிலையில் இந்தியாவின் மனித உரிமை இயக்கங்களும், மதசார்பற்ற இயக்கங்களும், கட்சிகளும், மக்களும், தலைவர்களும் இந்த ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள் என்பது ஒரு சந்தோசமான செய்தியே.

நடிகர் மோகன்லாலும், துபாய் புர்ஜ் கலிஃபா உல்லாச வீடும்!!

 உலகின் மிக உயரமான கட்டிடமாகிய (துபாய் நாட்டில் உள்ள) புர்ஜ் கலிஃபா அடுக்குமாடி,இந்த குடியிருப்பில் மூன்றரை கோடி ரூபாயில் வீடு வாங்கியுள்ளார் மலையாள நடிகர் மோகன்லால்.

கடந்த வாரம் தனது 51 வது பிறந்தநாளை நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடினார். தனக்கு தானே பிறந்தநாள் பரிசளித்துக் கொள்ள விரும்பினார்.

துபாயில் புர்ஜ் கலிஃபா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முடிவு செய்தார். முதலில் துபாய் சென்று வீட்டை பார்வையிட்டார். 29&வது மாடியில் 940 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள வீடு அவருக்கு பிடித்திருந்தது.

மூன்றரை கோடி ரூபாய் கொடுத்து அந்த வீட்டை வாங்கினார். கொச்சின், திருவனந்தபுரம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள இவரது வீடுகள் கலைநயத்துடன் கட்டப்பட்டவை.

அதேபோல் புர்ஜ் கலிஃபா வீடும் கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு நாட்களை துபாயில் உல்லாசமாக கழிப்பதுதான் மோகன்லாலின் வழக்கம்.

ஏற்கனவே அவருக்கு அங்கு பங்களா உள்ளது. இதே குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு,

அவரது கணவர் முதலாண்டு திருமண நாள் பரிசாக வாங்கித் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் பலரும் இந்த குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளனர்.

சிந்திக்கவும்: ஒரு மனிதன் வாழ வசதியாக ஒரு வீடு போதாதா? எத்தனை வீடுகள் வாங்குவார்கள் இவர்கள். ஓவ்வொரு மனிதனும் "தான்" வசதியாக வாழ ஒரு வீடு, ஒரு கார், போதிய அளவு பொருளாதாரம் இவைகள் போதாதா?

மற்ற பணத்தி இருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தால் என்ன? துபையில் அதுவும் மூன்றரை கோடி ரூபாய்க்கு வீடு, அதிலும் இவர் நிரந்தரமாக வசித்தாலும் பரவாயில்லை இவர் விடுமுறையை கழிக்கத்தான் அதுவும்.

இப்படி பட்ட சமூக சிந்தனை அற்ற சினிமா கூத்தாடிகளை பார்த்துதான் இந்த மக்கள் மதி மயங்கி கிடக்கின்றனர். ஒவ்வொரு இந்திய குடிமகனின் பணமும் துபையில். "நமக்கு கீழே உள்ளவர்கள் கோடி நினைத்து பாரு" புரியுமா இந்த கூத்தாடிகளுக்கு.

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும்! SDPI !!

 பெங்களூரு: SDPI கட்சியின் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய உரை.SDPI அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட நாட்டில் வாழும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு விசாலமானது.

புதிய பூகோளத்தை வடிவமைத்திருக்கிறோம் அதற்கு எல்லைகள் உண்டு. இந்த பூகோள எல்லையில் ஹிந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், ஆதிவாசிகள், தலித்துகள், மற்றும் பிற இந்தியர்களுக்கு உரிய பிரதிந்தித்துவம் உண்டு.

வரையறுக்கப்பட்ட இந்த புதிய பூகோளத்தில் புதிய சரித்திரம் படைக்கவிருக்கிறோம்.இந்த புதிய சரித்திரம் படைக்க நமது கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் அவசியம். இந்த புதிய சிறிய கட்சி 21 மாநிலங்களில் செயல்வீரர்களைக் கொண்டுள்ளது.

11 மாநிலங்களில் மாநில அளவிலான கமிட்டிகளைக்கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது பெருமை படத்தக்கது. நமது இலக்கு ஒரு வருடத்தில் 200000 செயல்வீரர்களைச் சேர்ப்பது. இந்த இலக்கை நாம் அடையவில்லை மிக மெத்தனமான போக்கை கடைபிடித்துள்ளோம்.

இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கான நவீன அரசியல் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் உருவெடுத்துள்ளோம். இது தொடர்பாக எந்த முன்மாதிரியும் நமக்கில்லை. இந்த புதிய சிந்தனைக்கு நாமே முன்னோடி. புதிய உலகில் போராட்ட களத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம். அரசியலின் கிழிந்த பக்கத்திலிருந்து நாம் காப்பியடிப்பதில்லை. சுத்தமான கரும்பலகையில் முதல் எழுத்தை எழுததயராயிருக்கிறோம்.

இந்த கட்சி தனிநபர் துதிபாடும் கட்சியல்ல. தனிநபர் இங்கு முக்கியமல்ல. தலைமையேற்று வழிநடத்தும் பண்புதான் இங்கு மிக முக்கியம். நம்மிடையே தேர்ந்தெடுக்கும்போது நாட்டின் வருங்கால தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நமக்கு சவாலாக, நமக்கெதிராக பலர் திரும்பியுள்ளனர், மதச்சார்பின்மை மற்றும் போலி மதச்சார்பின்மை பேசுவோர், தலித்து ஆளும் வர்க்கம் இதுபோன்று முஸ்லிம் கட்சிகளும் நமக்கெதிராக திரும்பியுள்ளனர். பாஜகவும், கம்யூனிஸ்டுகளும் நமக்கு எதிராக உள்ளனர்.

ஒரு சிறிய சம்பவத்தை சாக்காக வைத்து கொண்டு SDPI கட்சியின் 100 க்கும் மேற்பட்ட அலுவலங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நமது தலைவர்கள் மிரட்டப்பட்டனர். RSS போன்ற வகுப்புவாத சக்திகளால் நமது செயல் வீரர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் நான் சத்தியமிட்டு சொல்கிறேன் நம் இயக்கத்தை எவராலும் தடுக்க முடியாது.

நண்பர்களே, இந்த அரசியல் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் என்று ஆச்சர்யப்படலாம். காரணம் மிக எளிமையானது. மற்ற பிற அரசியல் கட்சிகள் சிறியதோ அல்லது பெரியதோ இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மையுடன் உருவானது தான் சோசியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியா.

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும் திராணியுள்ள பச்சைக்குழந்தையின் வெள்ளை மனதுடன்,"அதுவல்ல, இது தான் பாதை" என்று சுட்டிக்காட்டும் கட்சி இது. இதுபோன்ற குணநலங்கள் உள்ளவர்கள் வரலாறு நெடுகிலும் எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளனர். வரலாறும் இவர்களுக்குத்தான் சொந்தம்.

அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சமுதாயங்களின் இளைஞர்களின் கோபாவேசத்தை அளவிட தெரியாதவர்கள் அரசியல் உருவாக்கத்தை நம்ப மறுக்கிறவர்களிடமிருந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். அவர்களை நாம் உதாசினம் செய்யலாம் அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இதற்காக நீங்கள் தயாராக இருங்கள் நாங்களும் தயாராகவே இருக்கிறோம். எஸ்டிபிஐ வெறும் அரசியல் கட்சியல்ல. இது ஒரு மிஷன். மக்களின் ஆழ்ந்த துயரத்திற்கு மத்தியில் அவர்களின் உள்ளக்கிடக்கையின் மனசாட்சியின் வெளிப்பாடு இது. இதுபோன்ற இயக்கங்கள் தான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்.

நான் ஏற்கெனவே கூறியுள்ளது போல நமது நாட்டிற்காக புதிய வரலாறு படைக்க புதிய பூகோளத்தை வரையறுத்திருக்கிறோம். நாம் இதில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நிகழ்காலத்தின் அர்பணிப்பு ஒளிமயமான எதிர்காலத்திற்காக.

செர்பிய போர்க்குற்றவாளியும்!! ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளியும்!!

 கடந்த 15 வருடங்களாக தேடப்பட்டுக் கொண்டிருந்த சேர்பிய போர்க் குற்றவாளி ரட்கோ மிலாட்விஜ் கைது செய்யப்பட்டுள்ளான். இவனது கைது உலகில் உள்ள ஜனநாயக விரும்பிகள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை பிறப்பித்துள்ளது.

1990 களில் முன்னாள் யுகோசுலாவியா துண்டு துண்டாக பிரிந்தபோது சேர்பிய இராணுவத்திற்கு இவன் தளபதியாக இருந்தான். அத்தருணம் அரச இராணுவத்தைப் பயன்படுத்தி இளைஞரும், பெரியோரும், முதியவருமாக 8.000 முஸ்லிம்களை படுகொலை செய்தான்.

இவனுடைய படுகொலை சேர்பிய முஸ்லீம்களுக்கு எதிரானது, போர் என்ற பொதுமைப்பட்ட கருவியை இனத்துவேஷத்துடன் பயன்படுத்தியது இவன் புரிந்த குற்றம்.

இப்போது கைது செய்யப்பட்ட ரட்கோ மிலாட்விஜ் செய்த கொலைகளும் மகிந்த, கோத்தபாய, சரத்பொன்சேகா அன் கொம்பனி செய்த கொலைகள் போன்றவைதான். சேர்பிய முஸ்லீம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற மத, இன வெறுப்பின் பாற்பட்ட போர் துஷ்பிரயோகமாகும்.

இத்தகைய போர்களை நடத்துவதும், அதற்கு துணை போவதும் மரண தண்டனைக்குரிய குற்றம் என்பதை மரணமடைந்த முன்னால் சேர்பிய அதிபர், தளபதி ரட்கோ மிலாட்விஜ் மீதும் ஹேக் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டது.

சிறீலங்கா சிங்கள இனவாதிகள் கத்தித் திரிவதைப்போல மிலாட்விஜ் ஒரு சேர்பிய கதாநாயகன் என்று ஓர் ஊர்வலம் சேர்பிய தலைநகர் பயோகோட்டில் நடைபெற்றது. அது ஊர்வலம் முடிந்த கையோடு சுருண்டுவிட்டது.

அதுபோல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முள்ளிவாய்க்காலில் நடாத்திய கற்பழிப்பு, படுகொலை, வெள்ளைக்கொடி கொலை, பொதுமக்கள் மீதான குண்டுவீச்சு என்று 140.000 பேருடைய மரணத்திற்கும், புதைந்து கிடக்கும் மண்டையோட்டுக்கும் பதில் சொல்ல வேண்டியது தீவிரவாதி ராஜபக்சேவின் அவசியம்.

இலங்கையில் நடந்துள்ளது பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல சர்வதேச போர்க்குற்றம். யுகோசுலாவியாவில் நடந்தது போன்ற போர்குற்றச் செயலே, இதை ஐ.நா. அறிக்கை தெளிவாக வரையறை செய்துள்ளது.

சிறீலங்காவுக்கு உதவிய சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் போர்க்குற்றத்தில் சிறீலங்கா ஈடுபடும் என்று எமக்கு தெரியாது என்று தப்பிக்க யாதொரு முகாந்திரமும் இல்லை.

மிலாட்விஜ்ற்கு ஒரு நீதி, சிறீலங்கா போர்க் குற்றவாளிகளுக்கு ஒரு நீதி என்று கூற உலக சட்டத்தில் இடமில்லை. சர்வதேச சட்டத்தின் முன் யாவரும் சமம்.. இதை சீனாவும் இந்தியாவும் மறுக்க யாதொரு முகாந்திரமும் இல்லை.

ஒல்லாந்து ஹேக் போர்க்குற்ற நீதிமன்றில் சலபொடான் மிலேசெவிச்சிற்கு போர்க்குற்ற மரண தண்டனை விதிக்கப்பட்டதை பார்த்த பிறகும் சிறீலங்காவில் அது மீறப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச சட்டத்தை கடுகளவும் கணக்கில் எடுக்காத செயல் என்பதை இந்தியாவும் சீனாவும் உணர்வது அவசியமல்லவா..?

போர் குற்றவாளி ராஜபக்சேக்கு அமெரிக்கா நிபந்தனை!!

அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் திட்டங்களை பின்பற்றுவது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எதனையூம் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபாட் ஓ பிளக், இலங்கை பின்பற்ற வேண்டிய சில நிபந்தனைகளை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அமெரிக்காவின் இலங்கை தூதுவர் பெட்ரிகா புட்டினிஸ் ஊடாக, வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் வலியூறுத்தப்பட்டது.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர இந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என ரொபர்ட் ஓ பிலக் வலியுறுத்தினார்.

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், இலங்கை அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை இது உள்ளடக்கி இருந்தது.

அத்துடன் இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன் வைத்தல், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றவற்றை நடைமுறைப்படுத்தல் என்பனவும் ஆகும்.

இது தொடர்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸஷும் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் அரசாங்கம் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலஸ்தீன் கிராமம் இராணுவ வலயமாக அறிவிப்பு

மேற்குக் கரையின் நப்லஸ் நகரை அடுத்துள்ள ஈராக் பூரின் எனும் பலஸ்தீன் கிராமத்தை, 'மூடிய இராணுவ வலய'மாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் அறிவித்துள்ளது. இக்கிராமத்தை அடுத்து சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலியப் பிரிவினைச் சுவருக்கு எதிராக வாரந்தோறும் ஊர்மக்களால் மேற்கொள்ளப்படும் அமைதியான எதிர்ப்புப் பேரணியில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்வதைத் தடுக்குமுகமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

ஈராக் பூரின் மேயர் அப்துல் ரஹீம் குத்தூஸ் தெரிவிக்கையில், "தேடுதல் நடவடிக்கை என்ற பேரில் உள்ளூர்வாசிகளின் வீடுகளில் நுழைந்து அட்டகாசம் புரியும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், ஈராக்பூரின், டெல் ஆகிய ஊர்களின் பிரதான நுழைவாயில்களில் பிரவேசத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

'தமக்குச் சொந்தமான நிலப்பிரதேசங்களைப் பலவந்தமாகக் கைப்பற்றி இஸ்ரேலியப் பிரிவினைச் சுவர் மற்றும் யூதக் குடியேற்றங்கள் அமைப்பதையும், தாம் அடிக்கடி யூதக் குடியேற்றவாசிகளின் அடாவடித் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதை ஆக்கிரமிப்பு அரசாங்கம் கண்டும் காணாமல் இருப்பதையும் எதிர்த்து பிரதி சனிக்கிழமைதோறும் அக்கிராமவாசிகளான பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் அமைதிப் பேரணிகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணும் இத்தகைய கெடுபிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் வாக்குமூலமளிக்கையில், "பிரதான நுழைவாயில்களின் அருகே இராணுவ வாகனங்களை நிறுத்திப் பிரவேசத் தடை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு இராணுவம், அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள வரும் ஊடகவியலாளர்களையும் பலஸ்தீன் ஆதரவாளர்களான வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களையும் தடுத்து நிறுத்துவதற்காகத் தன் துருப்பினரைத் தயார்நிலையில் வைத்திருந்ததோடு, உள்ளூர்வாசிகளின் சுதந்திரமான நடமாட்டத்தையும் தடை செய்திருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி பலஸ்தீன் கிராமங்களை அடுத்துள்ள 'ப்ராச்சா' எனும் யூத ஆக்கிரமிப்புக் குடியேற்றவாசிகள், பலஸ்தீனர்களை அச்சுறுத்தி அவர்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பலவந்தமாக அபகரித்துக் கொள்ளும் நோக்கிலும், அருகில் உள்ள கிணற்றில் இருந்து உள்ளூர்வாசிகள் குடிநீர் அள்ளுவதைத் தடுக்குமுகமாகவும் ஆயுதபாணிகளாக அடிக்கடி இக்கிராமங்களுக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 இதனால், பலஸ்தீனர்களான கிராமவாசிகள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனினும், இவர்களைத் தடுத்துநிறுத்தவோ அப்பாவிப் பலஸ்தீன் மக்களைப் பாதுகாக்கவோ இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, உள்ளூர்வாசிகளான பலஸ்தீனர்களை அடக்கியொடுக்கும் நடவடிக்கைகளிலேயே தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளரைத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

கடந்த வெள்ளிக்கிழமை (28.05.2011) மாலை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ராஸ் அல் அமூத் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் மிகமோசமான தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ஊடகவியலாளர்கள் சிலர் படுகாயமடைந்தனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இந்த அடாவடிச் செயலை பலஸ்தீன் ஊடகவியலாளர் பேரவை வன்மையாகக் கண்டித்துள்ளது.

பலஸ்தீன் ஊடகவியலாளர் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ராஸ் அல் அமூத் பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் சட்டவிரோதக் குடியேற்றங்கள், பலஸ்தீன் மக்களுக்கெதிரான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்குத் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் பலஸ்தீனர்களின் எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றுக் கொண்டிருந்த இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே மேற்படி ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

 இதனால், செய்தியாளர் தியாலா ஜுவைஹானும், படப்பிடிப்பாளர்களான சுலைமான் காதர் மற்றும் அதா உவைஸாத் ஆகியோரும் படுகாயமடைந்துள்ளனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமக்கு விருப்பமான எந்த ஒரு நிகழ்வையும் பற்றிச் செய்தி சேகரிக்கும் உரிமை எந்த ஒரு ஊடகவியலாளருக்கும் உள்ளது. அதனைத் தடுத்து நிறுத்த முனைவது மனித உரிமை மீறலாகும். இங்கு ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய குற்றச் செயல்களை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே மேற்படி ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் தாக்கப்பட்டுள்ளனர். நிச்சயமாக இதுபோன்ற அத்துமீறல் நடவடிக்கைகளை நோக்கி உலகின் கவனம் திரும்பவேண்டும்" என்று தனது அறிக்கையில் ஊடகவியலாளர் பேரவை சுட்டிக்காட்டியிருந்தது.

அதுமட்டுமன்றி, பலஸ்தீன் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கவும், அவர்கள் தாக்கப்படுவதையும் படுகொலை செய்யப்படுவதையும் தடுத்துநிறுத்தும் வகையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும் தம்மால் இயன்ற அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களையும் ஊடகவியலாளர் சங்கங்களையும் நோக்கி பலஸ்தீன் ஊடகவியலாளர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான்-கி-மூன்?

காஸா மீதான இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகையை முறியடிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் மனிதாபிமான நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தயாராகவுள்ள ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 குழுவை நோக்கித் தமது முயற்சியைக் கைவிடுமாறு கேட்டுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூனை காஸா முற்றுகைக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் ஒரு சட்டவிரோத முற்றுகை சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீன் மக்கள்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட சுமுகவாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகளின் உதவி அவர்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றது.

இந்நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் 'ஏற்படக்கூடிய மிகப் பாரதூரமான பிரச்சினைகளைத் தவிர்க்குமுகமாக காஸாவை நோக்கிப் பயணிக்குமுன் தமது நாட்டுப் பிரஜைகள் கலந்துகொள்ளவிருக்கும் ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 கப்பல்களைத் தடுத்துநிறுத்தும் வகையில் தமது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து பல்வேறு சர்வதேச நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ செய்திகளை அனுப்பிவைத்துள்ளார்.

ஏற்கெனவே 2008,2009 ஆம் ஆண்டுகளில் காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான முன்மொழிவுகளை வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவரிடமிருந்து இத்தகையதொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து மேற்படி ஐரோப்பிய அமைப்பு ஆச்சரியம் தெரிவித்துள்ளது.

ஃப்ரீடம் ஃபுளோடில்லா உதவிக்குழு என்பது மனிதாபிமானத்தை நேசிக்கும் தன்னார்வலர்களால் ஆன ஓர் அமைப்பாகும். குறித்த ஒரு மக்கள் குழுமத்தின் மீது சட்டவிரோதமாகத் திணிக்கப்பட்டுள்ள ஒரு முற்றுகையின்போது சர்வதேச சட்டம் நிச்சயமாக மௌனம் சாதிக்கவே முடியாது. எனவே, காஸா மீதான நியாயமற்ற முற்றுகையை முறியடிக்கும் வகையிலும், மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரும் தன்னார்வலர்கள் மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமுகமாகவும் ஐ.நா.வினால் புதிய பிரேரணைகள் முன்மொழியப்படுதல் வேண்டும் என மேற்படி அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

கைதிகள் தாக்கி சிறை மருத்துவர் பலி!

பீகார் மாநிலத்தில் சிறை கைதிகள் ஒன்றுகூடி கொடூரமாக தாக்கியதில், சிறை மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பீகார் மாநிலத்திலுள்ள கோபால்கஞ்ச் சிறையில் உள்ள கைதிகளுக்கு போலி மருத்துவ சான்றிதழ் கொடுக்க சிறை மருத்துவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறை கைதிகள் ஒன்றாக கூடி மருத்துவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சிறை மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சிறை கைதிகள் 7 பேர் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Sunday, 29 May 2011

அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி புதிதாக எதையும் தெரிவிக்கவில்லை: மன்மோகன் சிங்!

அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ள தீவிரவாதி டேவிட் ஹெட்லி, புதிதாக எதையும் தெரிவித்து விடவில்லை. அவர் கூறிய தகவல்கள் ஏற்கனவே நமக்கு தெரிந்தவைதான் என்று  பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளின் 6 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங்  நேற்று சனிக்கிழமை டெல்லி திரும்பினார். விமானத்தில் தன்னுடன் வந்த செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அ.தி.மு.க. சேர்க்கப்படுமா என கேட்டதற்கு, "இப்போதைக்கு தி.மு.க. எங்கள் கூட்டணி கட்சி. அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பற்றி கேட்டதற்கு, "2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணையை பொறுத்த மட்டில் சி.பி.ஐ. தனது பணிகளை செய்து வருகிறது. மேலும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. அதனால் அதுபற்றி நான் ஏதாவது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது'' என்று பதில் அளித்தார்.

மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

நாகரிக மனித சமுதாயத்தில் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்கள் வலிமையுடன் செயல்பட்டு வருவது நமக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. அந்த நாட்டில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடும் தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் அரசு ஒடுக்க வேண்டும்.

வேலையில்லா திண்டாட்டத்தையும் வறுமையையும் போக்க நாட்டில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். வளர்ச்சி பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதை கட்சிகள் அரசியல் ஆக்கக்கூடாது. ஆனால் இது விவசாயிகள் சம்பந்தப்பட்டது என்பதால், இந்த பிரச்சினையை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.

 நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்படும்.

கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அந்த மாநில மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளில் இருந்து இடதுசாரி கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஊழல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கவலை அளிக்கக்கூடிய பிரச்சினையாக உள்ளது. ஊழலை ஒழிப்பதற்கான முயற்சியில் அரசு தீவிரமாக உள்ளது. ஊழலை ஒழித்து இந்திய அரசியலை தூய்மையாக்க தெரிவிக்கப்படும் புதிய யோசனைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கும்.

பணக்கார நாடுகள் தங்களிடம் உள்ள அதிகாரங்களை விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை. சர்வதேச நிதி நிறுவனத்தின் புதிய தலைவர் கருத்து ஒற்றுமையுடன் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. எனவே ஒருமித்த கருத்துடன் அவர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேசி வருகிறது.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த தீவிரவாதி டேவிட் ஹெட்லி புதிதாக எதையும் தெரிவித்து விடவில்லை. அவர் கூறிய தகவல்கள் ஏற்கனவே நமக்கு தெரிந்தவைதான். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சமச்சீர் கல்வி ரத்து - முதல்வர் ஜெ.வுக்கு பாராட்டு

சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக மெட்ரிக் பள்ளிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் நெல்லை மண்டல மாநாடு சங்கர்நகரில் நடந்தது. மாநில துணைத்தலைவர் அனந்தராமன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், அவைத்தலைவர் மரியசூசை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் பேசினார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 8 வது சட்டமாக தனியார் பள்ளிகளின் தரமான கல்விக்கு வேட்டு வைக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்ததை வரவேற்கிறோம். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தில் தமிழக அரசு தலையிடாது என்ற அரசின் நல்ல நேர்மையான செயல்பாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

சென்னை - அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம மின்அஞ்சல்

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என வந்துள்ள மின் அஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின் அஞ்சல் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட்டள்ளது.
முதல் கட்ட விசாரணையில் இந்த மின் அஞ்சல் மைலாப்பூரில் உள்ள ஒரு இணைய தள மையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அங்கு சென்று விசாரணை நடத்தியும் அதனை அனுப்பிய நபர் யார் என கண்டறிய முடியவில்லை. எனவே இணையதள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது. முதலில் பெங்களூரு தூதரகத்துக்கும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி விரைவில் பிடிபடுவான் என காவல்துறை தெரிவித்துள்ளது. ராயப்பேட்டை  உதவி கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என வந்துள்ள மின் அஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின் அஞ்சல் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட்டள்ளது.

முதல் கட்ட விசாரணையில் இந்த மின் அஞ்சல் மைலாப்பூரில் உள்ள ஒரு இணைய தள மையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அங்கு சென்று விசாரணை நடத்தியும் அதனை அனுப்பிய நபர் யார் என கண்டறிய முடியவில்லை. எனவே இணையதள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது. முதலில் பெங்களூரு தூதரகத்துக்கும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி விரைவில் பிடிபடுவான் என காவல்துறை தெரிவித்துள்ளது. ராயப்பேட்டை  உதவி கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ISIஐ தீவிரவாத அமைப்பாக நிரூபிக்க இந்தியா முடிவு!

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நியூயார்க் நீதிமன்றத்தை இந்திய அரசு என்று தகவல்கள் கூறுகின்றன.

மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ரப்பி கேவ்ரியல் நோவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் தொடர்ந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் வாதியாகச் சேர்த்துக் கொள்ளக் கோரி இந்திய அரசு மனு செய்ய உள்ளது.

ஐஎஸ்ஐ அமைப்புக்கும் தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ள லஷ்கரே தொய்பா போன்ற அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்த ஏராளமான ஆதாரங்களுடன் இந்தியா நியூயார்க் நீதிமன்றத்தை நாட உள்ளது.

இது தொடர்பாகப் பேசிய அரசு அதிகாரி ஒருவர், "எங்களுடைய முக்கிய நோக்கம் மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ரப்பியின் குடும்பத்திற்கு உதவி செய்வதுதான். அதே வேளை, மும்பை தாக்குதலை நடத்தியதாகக் கருதப்படும் லஷ்கரே தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உள்ள தொடர்புகளையும் நாஙகள் நிரூபிப்போம்" என்று கூறியுள்ளார்.

குழந்தைகள் தங்களது மத அடையாளத்தை கூற அஞ்சுகின்றனர்: ஆய்வில் தகவல்

புலம் பெயர்ந்த குழந்தைகள் தங்களது மத அடையாளத்தை குறிப்பிடுவதற்கு பயப்படுகிறார்கள். இத்தகைய நிலை நீடித்தால் கனடாவில் கிறிஸ்துவ மதம் சக்தி வாய்ந்ததாக நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் கனடாவில் முஸ்லீம்கள் தங்களது நம்பிக்கைகளை பின்பற்றுவதில் எந்த வித இடையூறும் இல்லை என கூறுகிறார்கள். இருப்பினும் இதர வடிவத்தில் பாகுபாடுகள் தொடர்கின்றன என அவர்கள் கூறுகிறார்கள்.

கனடாவில் பல சமூக செயல்பாடுகள் அமைப்பான ஹியூமனாடிஸ் மற்றும் சோசியல் சயின்ஸ் மாநாடு ஞாயிற்றுக்கிழமை ப்ரடெரிக்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் போது புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் சமர்பிக்கப்படுகின்றன.

ஒட்டாவா பல்கலைகழக மத ஆய்வு துறை பேராசிரியரான பீட்டர் பேயர் கனடாவில் 2ம் சந்ததியை சேர்ந்த 350 பேரிடம் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்கள் 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.
சிட்னி, என்.எஸ், மொன்றியல், ஒட்டாவா, டொரண்டோ, எட்மாண்டன் மற்றும் வான்கூவர் பகுதிகளில் உள்ள மாணவர்களில் 36 குழுக்கள் ஆய்வை மேற்கொண்டனர்.

 இந்த குழுக்கள் நடத்திய ஆய்வின் போது கிறிஸ்துவ இளைஞர்கள் தங்களது மத நடைமுறைகளை வெளிப்படையாக கடைபிடிக்க அஞ்சும் நிலை காணப்பட்டது.

மத விவகாரங்களை காட்டிலும் இன பாகுபாடுகள் தான் தங்களை பாதிப்பதாக முஸ்லீம்கள் குறிப்பிட்டனர். கனடாவில் பல கலாசார சமூகம் உள்ளது. இதனை கனடாவில் உள்ள இரண்டாவது சந்ததியினர் நேர்மறை நோக்கிலேயே அணுகுகிறார்கள்

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!

 கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.

உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.

ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.

வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.

அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.

அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.

நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம்.

நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.

மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.

ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.

இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.

ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.

இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.

வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன.

சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

மத்திய அரசே அன்னா ஹஸாராவை காப்பாற்று!!

 என்னை கொள்வதற்கு முப்பது லட்சம் விலை விலை பேசப்பட்டதாகவும், அந்த நபர் என்னை கொள்ள மறுத்து விட்டதாகவும் அன்னஹசாரே கூறியுள்ளார் .

இந்த செய்தி இந்திய நாட்டையும், காந்திய வாதிகளையும், சமாதானத்தை விரும்பும் இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவுள்ளது.

இதன் பின்னணியில் இருப்பது யார்? என்று அவர் கூற மறுத்து விட்டார். அவர் அதை கூற மறுத்து விட்டதில் இருந்தே அவர்கள் சாதாரண ஆள்கள் இல்லை என்பது தெளிவாகிறது.

இருந்தாலும் ஏற்கனவே தேசபிதா மகாத்மாவை கொன்ற கயவர் கூட்டம் தான் இதற்க்கு பின்னில் இருக்கும் என்று காந்தியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

அரசு இவர்கள் விசயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என தேச நலம் விரும்பிகள் எதிர்பார்க்கிறார்கள். அன்னா ஹசாரே சமீபத்தில் மோடியியை பற்றி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்கை கோமான்களின் குடிமிச்சண்டை!!

கடந்த 2009 ம் ஆண்டு கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்யுமாறு ரெட்டி சகோதரர்கள் போர்க்கொடி தூக்கியபோது,அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், ரெட்டி சகோதரர்களை சமாதானம் செய்யுமாறு கட்சி மேலிடம் என்னை கேட்டுக்கொண்டது.ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பதவிகளை அளிக்கும் முடிவை நான் எடுக்கவில்லை.

கட்சியின் மாநில பொறுப்பாளர் அருண் ஜெட்லி, மூத்த தலைவர்களான வெங்கையா நாயுடு, அனந்த குமார் ஆகியோரே அதற்கு காரணம் என சுஷ்மா தெரிவித்தார்.

இதனால், பா.ஜனதா மூத்த தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

சிந்திக்கவும்: இவர்கள் மத துவேசத்தை உண்டு பண்ணி ஹிந்து முஸ்லீம் கலவரங்களை உண்டாக்கி அதை வைத்து கட்சி வளர்த்தவர்கள். இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் இரத்த ஆறுதான் ஓடும்.

நமது பிரதமர் சுத்தமானவர்: அன்னா ஹசாரே!!

 பிரதமர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களையும் ஊழல் புகார் தொடர்பாக மக்கள் கோர்ட்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்கும் வகையில், லோக்பால் சட்டம்' உருவாகி வருகிறது.
அந்த சட்டத்துக்காக நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், லோக்பால் சட்ட மசோதா உருவாக்கும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளை 50 சதவீதம் அளவுக்கு சேர்த்துக் கொள்ள மத்திய அரசு இறுதியாக இறங்கி வந்தது.

ஆனால், இன்னமும் அரசிடம் இருந்து பல்வேறு பிரச்சினைகளை அந்த குழு எதிர் கொண்டு வருகிறது. நமது பிரதமர் சுத்தமானவர். நல்ல மனிதர். ஆனால், ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படும் பின்னணி சக்திகள் தான் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றார்.

சட்டசபை உறுப்பினராக நாளை கருணாநிதி பதவி ஏற்பு!

தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, நாளை திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த 23ஆம் திகதி பதவி ஏற்றனர். அப்போது கருணாநிதி அவரது மள் கனிமொழியைப் பார்க்க டெல்லி சென்றிருந்ததால் அன்றைய தினம் பதவி ஏற்கவில்லை. அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், சிவபதி, மனோகரன் ஆகியோரும் பதவி ஏற்காமல் இருந்தனர்.
இதில்  சிவபதி மற்றும் மனோகரன் ஆகிய இருவரும், சென்ற  வெள்ளிக்கிழமை தாற்காலிக பேரவைத் தலைவர் செ.கு. தமிழரசன் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றனர்.

கருணாநிதி மற்றும் துரைமுருகன் ஆகிய இருவரும், நாளை திங்கட்கிழமை, சட்டப் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

பலஸ்தீன் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் உள்ள கைதிகள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கடந்த மூன்று வாரங்களாக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டமொன்றைத் தொடர்ந்தனர். இப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அவர்கள் முடிவெடுத்திருப்பதாக 'அஸ்ரா' சிறைக்கைதிகள் தொடர்பான கற்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் கடந்த மூன்று வாரகாலம பரவலாகத் தொடர்ந்து இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, பலஸ்தீன் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தற்போது முன்வந்துள்ளது.
இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் அல்லது சிறைக்கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும்பட்சத்திலோ உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனக் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
பலஸ்தீன் கைதிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்காமை, நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படாமை, தமது உறவினர்களைக் கிரமமாகச் சந்திக்க அனுமதி மறுப்பு, ஒடுங்கிய இருட்டான சிறைக் கொட்டடிகளில் தனிமைச் சிறையில் அடைத்துவைத்தல், பெண் சிறைக் கைதிகளின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுதல், பிரசவத்தின் போதும், குழந்தைக்குப் பாலூட்டும்போதும்கூட கைவிலங்குகளை அகற்றாதிருத்தல், கழுவுநீர் கசியும் பூச்சிகள் நெளியும் துர்நாற்றமான அறைகளில் அடைத்துவைத்தல், மிகக் கடுமையான சித்திரவதைகளை மேற்கொள்ளுதல் முதலான அடிப்படை மனித உரிமைகளுக்கு மாற்றமான முறையில் பலஸ்தீன் ஆண்-பெண் கைதிகள் நடாத்தப்படுவதை எதிர்த்தே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் உள்ள கைதிகள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கடந்த மூன்று வாரங்களாக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டமொன்றைத் தொடர்ந்தனர். இப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அவர்கள் முடிவெடுத்திருப்பதாக 'அஸ்ரா' சிறைக்கைதிகள் தொடர்பான கற்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.
 
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் கடந்த மூன்று வாரகாலம் பரவலாகத் தொடர்ந்து இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, பலஸ்தீன் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தற்போது முன்வந்துள்ளது.
 
இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் அல்லது சிறைக்கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனக் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
 
பலஸ்தீன் கைதிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்காமை, நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படாமை, தமது உறவினர்களைக் கிரமமாகச் சந்திக்க அனுமதி மறுப்பு, ஒடுங்கிய இருட்டான சிறைக் கொட்டடிகளில் தனிமைச் சிறையில் அடைத்துவைத்தல், பெண் சிறைக் கைதிகளின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுதல், பிரசவத்தின் போதும், குழந்தைக்குப் பாலூட்டும்போதும்கூட கைவிலங்குகளை அகற்றாதிருத்தல், கழுவுநீர் கசியும் பூச்சிகள் நெளியும் துர்நாற்றமான அறைகளில் அடைத்துவைத்தல், மிகக் கடுமையான சித்திரவதைகளை மேற்கொள்ளுதல் முதலான அடிப்படை மனித உரிமைகளுக்கு மாற்றமான முறையில் பலஸ்தீன் ஆண்-பெண் கைதிகள் நடாத்தப்படுவதை எதிர்த்தே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, 28 May 2011

கலாநிதி அஹ்மத் பஹ்ஹாரின் ஓமான் விஜயம்

பலஸ்தீன் சட்டப் பேரவையின் இணைப் பேச்சாளரான கலாநிதி அஹ்மத் பஹ்ஹார் ஓமானுக்கு அரசியல் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் ஓமான் அரச அதிகாரிகளுடன் பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்திய கலாநிதி பஹ்ஹார், இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாகவும் பலஸ்தீன் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஓமானிய அரசு உறுதுணையாக நிற்கவேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.

கலாநிதி பஹ்ஹார் மற்றும் அவருடன் சென்ற இரு பிரமுகர்கள் ஆகியோரை ஓமானின் வெளிநாட்டு அமைச்சர் யூஸுப் பின் அலவி வரவேற்றார். பலஸ்தீன் பிரமுகர்கள் மூவரும் ஓமானிய அபிவிருத்தித் திட்ட அமைச்சர் மற்றும் முக்கிய பல ஓமானியப் பிரமுகர்களைச் சந்தித்தனர்.

பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் ஓமானிய முடியரசின் நிலைப்பாடு குறித்து பஹ்ஹார் ஓமானிய அரச பிரமுகர்களிடம் வினவியபோது, பலஸ்தீனின் உள்ளக நிலவரம் சீராவது குறித்துத் தமது மகிழ்ச்சியையும் கரிசனையையும் வெளிப்படுத்தியதோடு, பலஸ்தீனக் குழுக்களுக்குள் பரஸ்பரப் புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் ஏற்பட வேண்டியதன் இன்றியமையாமை பற்றியும் வலியுறுத்தினர்.

ஃப்ரீடம் புளோடில்லா-2 இல் இணையும் 12 ஐரோப்பிய நாடுகள்

ஃப்ரீடம் புளோடில்லா-2 இல் இணைவதற்கு 12 ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முறியடிப்பதற்கான ஐரோப்பிய அமைப்பு கடந்த வியாழக்கிழமை (26.05.2011) தெரிவித்துள்ளது.
மேற்படி அமைப்பின் பேச்சாளர் ரமி அப்து தெரிவிக்கையில், ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் ஏனைய 8 ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து காஸா மக்களுக்கான நிவாரண உதவிக் குழுவில் பங்குகொள்ளப் போவதாக அறிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், மனிதாபிமான மற்றும் சமாதானச் செயற்பாட்டாளர்கள் முதலான பலதரப்பினரும் இணைந்து பயணிக்கவுள்ள இந்த நிவாரண உதவிக் குழுவினர் தமது இலக்கினை தடைகள் இன்றி வெற்றிகரமாகச் சென்றடைய உரிய ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் வழங்க முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் தனது அமைப்பின் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக 1.7 மில்லியன் பலஸ்தீன் மக்கள் அநியாயமாக முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையை மாற்றியமைக்கும் எதிர்பார்ப்போடு காஸாவை நோக்கிப் பயணிப்பதற்காக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலான நிலையையும் மீறி எதிர்பார்த்ததையும் விட அதிகமான கப்பல்கள் தமது குழுவில் இணைந்துள்ளன என்றும், தமது உன்னத இலக்கினை அடையப் பெறுவதற்காக எத்தகைய விலையைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயாராகவே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ரமி அப்து தன்னுடைய அறிக்கையில், ரஃபா எல்லைக் கடவையை நிரந்தரமாகத் திறப்பது என்ற எகிப்திய தரப்பின் முடிவானது பலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரையில் ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாகும் என்றும், இந்த முன்னெடுப்பு சரியான திசையிலான ஒரு பயணத்துக்கான சமிக்ஞையாக அமைந்துள்ளதோடு, எல்லையூடான போக்குவரத்து வரையறைகளும் கட்டுப்பாடுகளும் தனிமனிதர்களுக்குரியதாக இருக்கவேண்டுமே தவிர, பொருட்களுக்குரியதாக அமையக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதுவரை காலமும் காஸா மக்களுக்குத் தேவையான பொருட்கள் யாவும் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள எல்லைக்கடவைகள் ஊடாகவே எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. அது அம்மக்களைச் சென்றடைய மிக நீண்டகாலம் எடுக்கின்றது. மருந்து, மருத்துவ உபகரணங்கள் முதலான, மிகத் துரிதமாக காஸா மக்களைச் சென்றடைய வேண்டிய பொருட்களுக்கான தேவை அங்கு அதிகமாக உள்ளது என ரமி அப்து சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் நிவாரண உதவிக்குழுவைச் சேர்ந்த கப்பல்கள் மீது சர்வதேசக் கடற்பரப்புக்குள் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கிய செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு விசாரணை என்ற பெயரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு பல்வேறு வகையிலும் அவமானப்படுத்தப்பட்டனர். இதனால், துருக்கி-இஸ்ரேலிய நல்லுறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, உலகளாவிய ரீதியில் இஸ்ரேல் மிகப்பெரும் கண்டனங்களை எதிர்கொண்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.
"ஃப்ரீடம் புளோடில்லா-2" இல் இணைவதற்கு 12 ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முறியடிப்பதற்கான ஐரோப்பிய அமைப்பு கடந்த வியாழக்கிழமை (26.05.2011) தெரிவித்துள்ளது.
 
மேற்படி அமைப்பின் பேச்சாளர் ரமி அப்து தெரிவிக்கையில், ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் ஏனைய 8 ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து காஸா மக்களுக்கான நிவாரண உதவிக் குழுவில் பங்குகொள்ளப் போவதாக அறிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், மனிதாபிமான மற்றும் சமாதானச் செயற்பாட்டாளர்கள் முதலான பலதரப்பினரும் இணைந்து பயணிக்கவுள்ள இந்த நிவாரண உதவிக் குழுவினர், தமது இலக்கினை தடைகள் இன்றி வெற்றிகரமாகச் சென்றடைய உரிய ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் வழங்க முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் தனது அமைப்பின் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக 1.7 மில்லியன் பலஸ்தீன் மக்கள் அநியாயமாக முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையை மாற்றியமைக்கும் எதிர்பார்ப்போடு காஸாவை நோக்கிப் பயணிப்பதற்காக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலான நிலையையும் மீறி எதிர்பார்த்ததையும் விட அதிகமான கப்பல்கள் தமது குழுவில் இணைந்துள்ளன என்றும், தமது உன்னத இலக்கினை அடையப் பெறுவதற்காக எத்தகைய விலையைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயாராகவே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ரமி அப்து தன்னுடைய அறிக்கையில், ரஃபா எல்லைக் கடவையை நிரந்தரமாகத் திறப்பது என்ற எகிப்திய தரப்பின் முடிவானது பலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரையில் ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாகும் என்றும், இந்த முன்னெடுப்பு சரியான திசையிலான ஒரு பயணத்துக்கான சமிக்ஞையாக அமைந்துள்ளதோடு, எல்லையூடான போக்குவரத்து வரையறைகளும் கட்டுப்பாடுகளும் தனிமனிதர்களுக்குரியதாக இருக்கவேண்டுமே தவிர, பொருட்களுக்குரியதாக அமையக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதுவரை காலமும் காஸா மக்களுக்குத் தேவையான பொருட்கள் யாவும் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள எல்லைக்கடவைகள் ஊடாகவே எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. அது அம்மக்களைச் சென்றடைய மிக நீண்டகாலம் எடுக்கின்றது. மருந்து, மருத்துவ உபகரணங்கள் முதலான, மிகத் துரிதமாக காஸா மக்களைச் சென்றடைய வேண்டிய பொருட்களுக்கான தேவை அங்கு அதிகமாக உள்ளது என ரமி அப்து சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் சர்வதேசக் கடற்பரப்புக்குள் வைத்து "ஃப்ரீடம் புளோடில்லா" நிவாரண உதவிக்குழுவைச் சேர்ந்த கப்பல்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கிய செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு, 'விசாரணை' என்ற பெயரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு பல்வேறு வகையிலும் அவமானப்படுத்தப்பட்டனர். இதனால், துருக்கி-இஸ்ரேலிய நல்லுறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, உலகளாவிய ரீதியில் இஸ்ரேல் மிகப்பெரும் கண்டனங்களை எதிர்கொண்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.

பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு: எட்டுப் பேர் பலி

கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியின் ஸலர்ஸாய் பிராந்தியத்தில் உள்ள பரபரப்பான சந்தையில் நிகழ்நத குண்டுவெடிப்பினால் எட்டுப் பேர் பலியானதோடு மேலும் 14 பேர் படுகாமடைந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
அரச மருத்துவமனை மருத்துவர் முஹம்மத் ஸயீத், குண்டுவெடிப்பினால் ஸ்தலத்திலேயே பலியான நான்குபேரின் உடல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றன என்றும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் நால்வர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.
படுகாயமடைந்துள்ள பலரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் அரசதரப்பு அதிகாரி இஸ்ரார் கான் கருத்துரைக்கையில், இந்த வெடிகுண்டு தாலிபான் எதிர்ப்பாளர்கள் சிலர் வழமையாக ஒன்றுகூடும் ஓர் உணவகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்தந் தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகையில், இதே பிராந்தியத்தில் இருந்து தம்மை வெளியேற்றம் முயற்சியில் ஈடுபட்ட பலரைக் குறிவைத்துத் தாலிபான்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர் என்று சாட்சியமளித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியப் பாதுகாப்பு நிலைவரம் என்பது நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காவல்துறையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொலைத் தாக்குதல்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த வியாழக்கிழமை ஹங்கு நகரில் உள்ள காவல்துறை மீது இடம்பெற்ற மிகப் பெரிய கார் குண்டுவெடிப்பினால், 38 பேர் கொல்லப்பட்டதோடு 52 பேர் படுகாயமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியின் ஸலர்ஸாய் பிராந்தியத்தில் உள்ள பரபரப்பான சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் எட்டுப் பேர் பலியானதோடு, மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.

அரச மருத்துவமனை மருத்துவர் முஹம்மத் ஸயீத், குண்டுவெடிப்பினால் ஸ்தலத்திலேயே பலியான நான்குபேரின் உடல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றன என்றும், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் நால்வர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.
படுகாயமடைந்துள்ள பலரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் அரசதரப்பு அதிகாரி இஸ்ரார் கான் கருத்துரைக்கையில், தாலிபான் எதிர்ப்பாளர்கள் சிலர் வழமையாக ஒன்றுகூடும் ஓர் உணவகத்திலேயே இக்குண்டு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்தத் தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகையில், இப்பிராந்தியத்தில் இருந்து தம்மை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட பலரைக் குறிவைத்துத் தாலிபான்கள் இதற்கு முன்னரும் இத்தகைய தாக்குதல்களை நடாத்தியுள்ளனர் என்று சாட்சியமளித்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியப் பாதுகாப்பு நிலைவரம் என்பது நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காவல்துறையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொலைத் தாக்குதல்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த வியாழக்கிழமை ஹங்கு நகரில் உள்ள காவல்துறை மீது இடம்பெற்ற மிகப் பெரிய கார் குண்டுவெடிப்பினால், 38 பேர் கொல்லப்பட்டதோடு, 52 பேர் படுகாயமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.