Sunday, 15 May 2011

ஜெ. பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மோடி வருகிறார்!

தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ள ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக குஜராத் அரசு கூறியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள அதிமுக, திங்கள் கிழமையன்று பதவியேற்க உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கிறார். தன்னுடைய பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, தன்னுடைய நெருங்கிய நண்பரான குஜராத் முதல்வருக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.

ஜெயலலிதா விடுத்த அழைப்பை ஏற்று குஜராத் முதல்வர் மோடி ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மே 16ஆம் தேதி சென்னை செல்கிறார் என குஜராத் அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment