கைரோ:முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் தன் நண்பரின் நிறுவனம் மூலமாக இஸ்ரேலுக்கு எரிவாய்வு ஏற்றுமதி செய்தும் ஆயுத வியாபாரம் மூலமாகவும் சொத்து சேர்த்துள்ளதாக எகிப்தின் நீதிதுறை அமைச்சர் முஹம்மத் எல்-கிண்டி தெரிவித்துள்ளார். எகிப்தில் போராட்டம் நடக்கும்போது போராட்ட கார்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முபாரக் உத்தரவிட்டு இருந்தால் அவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
எல்-கிண்டி தினசரி பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்த முபாரக் கூறியிருந்தால் அவருக்கு நிச்சயமாக மரண தண்டனை கிடைக்கும் என தெரிவித்துள்ளார். முபாரக் இன்னும் சில தினங்களில் ஷரம் எல் ஷேய்க் மருத்துவமனையில் வைத்து விசாரிக்கப் படலாம் எனக் கூறினார். அடுத்து வரும் அதிபர் ஒருவர் தான் முபாரக்கிற்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் உள்ளவர் என தெரிவித்தார்.
மேலும் எல்-கிண்டி கூறியதாவது நான் அதிபராக இருப்பின் 800 பேரை கொன்றவருக்கு மன்னிப்பு அளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.
மேலும் எல்-கிண்டி கூறியதாவது முபாரக்கின் மகன்களும் மனைவியும் ஊழல் குற்றசாற்றில் சிக்கியுள்ளதாகவும் எகிப்தின் முன்னால் முதல் பெண்மணி சுசேன் முபாரக் சட்ட விரோதமாக சொத்து சேர்த்தது குறித்து சில தினங்களில் விசாரிக்கப்படுவார் எனவும் கூறினார்.

No comments:
Post a Comment