Sunday, 15 May 2011

ஹஜ் பயணிகள் குலுக்கல் தள்ளிவைப்பு!

நடப்பு 2011ஆம் ஆண்டில், தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணத்திற்கு செல்லும் யாத்ரீகர்களை தேர்வு செய்வதற்கான குலுக்கல், நாளை 17அம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் இக்குலுக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில ஹஜ் குழு உறுப்பினர், செயல் அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், வரும் 17ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஹஜ் பயணிகள் தேர்வு, வரும் 24ம் தேதி சென்னை புதுக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆணைக்கார் அப்துல் சுக்கூர் கலையரங்கில் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment