
இந்நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள், ரமல்லாஹ் , காஸா, மேற்கு கரை பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பலஸ்தீனர்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியேறவேண்டும் என்பதை உறுதிசெய்து வருகின்றனர் இந்த ஆர்பாட்டங்கள் , பேரணிகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை சுட்டு வருகின்றது இதில் 46 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர் காஸாவின் வட பகுதி நோக்கி ஆட்டிலறி குண்டுகள் , இராணுவ டாங்கிகள் மூலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை தாக்குதல் நடத்துவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது .
காஸாவில் உமரி மஸ்ஜிதில் ‘ஆக்கிரமிப்பு தினம்’ நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய காஸா பிரதமர் இஸ்மாயில் ஹனியா இந்த மஸ்ஜிதில்தான் ஜிஹாத் ஆரம்பிக்கப்பட்டது என்றும் எமது மக்கள் ஒரு கையில் அல் குர்ஆனையும் மறுகையில் துப்பாக்கியையும் ஏந்திய ‘போராளி மாதிரி’-model of fighters- ஒன்றை -உலகிற்கு – வழங்கினார்கள் இன்று வாலிபர்கள் ஒரு கையில் அல் குர்ஆனையும் மறுகையில் துப்பாக்கியையும் ஏந்தி வியக்கதக்க சாதனைசெய்து எதிரி தோல்வியை ஏற்றுகொள்ள நிர்பந்தித்துள்ளனர் தியாகம் இரத்தம் இன்றி ஜிஹாத் என்பது இல்லை தியாகங்கள் இன்றி சுதந்திரம் என்பது இல்லை எமது மக்கள் தியாகங்களின் கட்டணத்தை -bill- செலுத்த தயங்கி நிற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இங்கு கருத்துரைக்கையில் பலஸ்தீன் மூன்று காரணங்களினால் வெற்றியை அண்மித்து விட்டது ஒன்று ஹமாஸ், பாதா ,மற்றும் ஏனைய பலஸ்தீன அமைப்புகள் தமக்குள் நல்லிணக்க ஒப்பந்தம் செய்துள்ளமை ,இரண்டாவது அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றம் இது பலஸ்தீன விடையத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் மூன்றாவது இஸ்ரேல் பல மட்டங்களில் தோற்று வருகின்றமை என்றும் தெரிவித்துள்ளார்.
இணைப்பு -2
பலஸ்தீன ‘ஆக்கிரமிப்பு தினம்’ அல்லது பேரவலம் ஏற்பட்ட தினம் ‘நக்பா’ தினம் மத்திய கிழக்கின் பல நாடுகளில் அனுஷ்டிக்கபடுகின்றது இந்த நிகழ்வுகளில் இதுவரை 15 க்கும் அதிகமானவர்கள் கொல்லபட்டுள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
காஸாவில் இஸ்ரேலிய படைகள் சுட்டதில் குறைந்தது ஒருவர் கொல்லபட்டுள்ளார் 80 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் மேற்கு கரையிலும் பலர் படு காயம் அடைந்துள்ளனர் எகிப்பது தலைநகர் கெய்ரோவிழும் இஸ்ரேலிய தூதுவராளைத்தை சுற்றி வளைத்து ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது இந்த ஆர்பாட்டம் செய்யும் மக்களை விரட்ட போலீஸ் ரப்பர் சுற்றுகொண்ட ஸ்டீல் குண்டுகளை பயன்படுத்தி சுட்டதிலும் , சுவாசத் தடுப்பு புகை குண்டுகளை ஏவியதன் மூலமும் 120 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளானர்.
அதேவேளை சிரியாவில் இடம்பெற்ற ஆர்பட்டங்களில் இஸ்ரேல் சுட்டதில் நால்வர் கொல்லபட்டுள்ளனர் என்று சிரியா தேசிய சேவைகள் தெரிவித்துள்ளது, லெபனானிலும் இந்த ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment