Tuesday, 3 May 2011

புதுவலசை to பனைக்குளம் புதுப்பிக்கபடும் குறுக்குவழி சாலை

நமதூரிலிருந்து பனைக்குளம் செல்வதற்கு இலகுவான பாதையாக உமர் ஊரணி வழியாக பாதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாதை நமதூர் மக்களுக்கும், பனைக்குளத்தை சேர்ந்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனால் அதிகம் பயனடைந்தவர்கள் நமதூர் மாணவ மற்றும் மாணவியர்கள்.
 நமதூரிலிருந்து பனைக்குளத்திற்கு படிக்க செல்லும் மாணவர்கள் தங்கள் சைக்கிள் பயணத்தை இந்த பாதை வழியாக பயன்படுத்தி வெறும் 10 நிமிடத்தில் பள்ளிக்கு செல்லும் அளவிற்கு சாலை நன்றாக இருந்தது. அது பயனுள்ளதாகவும் அனைவரும் கருதினர். ஓரிரு ஆண்டுகளில் அந்த சாலை பழுதடைந்தது.
 யாரும் பயன் படுத்த முடியாதவாறு மிகவும் சேதமடைந்தது. இதனால் அந்த பாதை அனைவர் மனதிலும் இருந்து சிறுது சிறிதாக நீங்க தொடங்கியது. இந்த சூழ்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த சாலை புதிப்பக்கப்ட்டு கொண்டிருக்கிறது.
 இந்த புதுப்பிக்கும் வேலை முடிந்த பிறகு மீண்டும் அப்பாதையை  நமதூர் மக்கள் மிகவும் சந்தோஷத்தோடு பயன்படுத்துவார்கள். இதனால் பனைக்குளத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது அனைவரின் கருத்து.

No comments:

Post a Comment