பாகிஸ்தானில் இருப்பதாகச் சொல்லப்பட்ட இந்திய அரசு தேடி வரும் குற்றவாளிகளில் ஒருவர் மும்பை புறநகர்ப் பகுதியான தானேவில் இருப்பது வெளியாகி இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தேடிவரும் மிக முக்கியக் குற்றவாளிகளில் 50 பேரைக் கொண்ட பட்டியலை அண்மையில் இந்திய அரசு பாகிஸ்தானிடம் அளித்தது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருப்பதாகவும் இவர்களை இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்திய அரசு கோரியது.
இந்தப் பட்டியலில் வஜ்ஹுல் கமர் கான் என்பவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. 2003ஆம் ஆண்டு மும்பை முலுன்ட் பகுதியில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்புத் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தற்போது பிணையில் வெளிவந்து தன்னுடைய தாய், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையின் புறநகர்ப் பகுதியான தானேவின் வாகலே எஸ்டேட் என்ற இடத்தில் வசித்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
தாவூத் இப்ராகீம் உள்பட பலரும் பாகிஸ்தானில் இல்லை என அந்நாட்டு அரசு கூறிவரும் நிலையில், பாகிஸ்தான் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ள பட்டியலில் இருப்பவர் இந்தியாவில் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்திய அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டபோது, "இந்தப் பட்டியலை நான் தயாரிக்கவில்லை" என்று கூறியுள்ளார். மேலும் "ஒரு தவறான பெயரின் காரணமாக பெரிய பிரச்சனையை ஒதுக்கிவிடக் கூடாது" என்றும் அவர் கூறியுள்ளார்.
கானின் பெயர் இந்தப் பட்டியலில் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment