காத்தான்குடி ஐந்தாம் குறிச்சியிலுள்ள காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் மௌலவி ஆசிரியராக கடமையாற்றும் எம்.எச். சாஜஹான் என்பவரின் விட்டின் மீது இன்று அதிகாலை மூன்று மணியளவில் இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.இதனால் மௌலவியின் வீட்டுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட வில்லை.இவரின் வீட்டுக்கு வீசப்பட்ட கைக்குண்டு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பெற்றோல் குண்டு எனவும் இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணை நடாத்தி வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.மேற்படி மௌலவி சாஜஹான் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment