Saturday, 14 May 2011

பலஸ்தீன் தொடரும் அக்கிரமம்-சிறுவனை சுட்டுக்கொன்றது இஸ்ரேல்

Young_boy
ராமல்லா:கிழக்கு ஜெருசலமில் பலஸ்தீன் சிறுவனை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. இஸ்ரேல் எதிர்ப்பு தினத்தை ஒட்டி வெள்ளிக் கிழமை ஸில்வானில் நடந்த நிகழ்ச்சியின் போது முராத் அய்யாஷ் என்ற சிறுவனுக்கு தோளில் குண்டு பாய்ந்தது. நேற்று அதிகாலை சிறுவன் இறந்துவிட்டதாக இஸ்ரேல் போலீஸ் அறிவித்தது.

துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை எனவும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என போலீஸ் செய்தி தொடர்பாளர் மிக்கி ரோஸன் பெல்ட் தெரிவித்துள்ளார். ஆனால், அய்யாஷின் அடிவயிற்றில் குண்டு பாய்ந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, அல் அக்ஸாவுக்கு அருகில் நேற்று இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீனர்களை தாக்கியது. ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. இன்று பலஸ்தீன் மக்கள் சோகதினமாக கடைபிடிக்கின்றனர். 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு உருவாக்கப்பட்டதின் 63-ஆவது ஆண்டை துக்கதினமாக பலஸ்தீனர்கள் கடைபிடிக்கின்றனர்.

ஜெருசலத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் பலஸ்தீன் மக்களுக்குமிடையே மோதல் நடைபெற்றது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்த எகிப்திலிருந்து காஸ்ஸாவுக்கு 35 பேர்கள் அடங்கிய குழு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment