Saturday, 14 May 2011

அமெரிக்காவின் உறவை மறு பரிசீலனை செய்யவேண்டும்-பாகிஸ்தான் பாராளுமன்றம்

Yousaf Raza Gilani
இஸ்லாமாபாத்:அமெரிக்க கமாண்டோக்கள் பாகிஸ்தானின் எல்லையை கடந்து  அத்துமீறி நுழைந்து உஸாமா பின் லாதின்  கொலை செய்த சூழலில் அமெரிக்காவுடனான உறவை மறு பரிசீலனை செய்யவேண்டுமென அந்நாட்டு பாராளுமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உஸாமா கொல்லப்பட்ட சம்பவத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும்.ஆளில்லா விமானத்தாக்குதலை நிறுத்தாவிட்டால் நேட்டோவின் செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தவேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.வடகிழக்கு பாகிஸ்தானில் ராணுவ பயிற்சி மையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 80 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையொட்டி இந்நடவடிக்கையை பாக்.பாராளுமன்றம் மேற்கொண்டுள்ளது.

உஸாமாவை அமெரிக்கா கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானின் இறையாண்மையின் மீதான ஆக்கிரமிப்பு என பாக்.பாராளுமன்றம் தெரிவித்தது.இத்தகைய சம்பவங்கள் இனிமேல் நடக்காமலிருக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.உளவு துறையின் வீழ்ச்சியைக்குறித்து விசாரணை நடத்தவேண்டும்.ஆப்கானின் எல்லையையொட்டிய பழங்குடியினர் பகுதியில் அமெரிக்கா நடத்தும் ஆளில்லா விமானத்தாக்குதலை அங்கீகரிக்க இயலாது.

தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஆப்கானில் நேட்டோ ராணுவத்திற்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை கொண்டு போக பாகிஸ்தானின் மண்ணில் அனுமதிக்கக்கூடாது என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

உஸாமா கொலைத்தொடர்பான அறிக்கையை ராணுவ தலைமை தளபதி லெஃப்.ஜெனரல் அஹ்மத் ஷுஜா பாஷா பாராளுமன்றத்தில் வாசித்தார்.தனது பதவியை ராஜினாமாச்செய்யப்போவதாக ஏற்கனவே பாஷா தெரிவித்திருந்தார்.குற்றகரமான தோல்விதான் உளவுத்துறையின் புறத்திலிருந்து உருவானதாக பாஷா தெரிவித்தார்.

No comments:

Post a Comment