
ஹைதராபாத்:நேற்று முன்தினம் மர்மநபர்களால் சுடப்பட்ட மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அக்பருத்தீன் உவைஸி தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். உவைஸி அனுமதிக்கப்பட்டுள்ள கேர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், உவைஸியின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுவாசத்திற்கு வெண்டிலேட்டரில் கிடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சிறுநீரகம் பழுதடைந்துள்ளதை தொடர்ந்து டயாலிஸ் செய்யப்பட்டுவருகிறது. ஞாயிற்று கிழமை அவருக்கு அடி வயிற்றில் அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. அக்பருத்தீன் உவைஸி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவருடைய சிறுநீரகம், சிறுநீரகப்பை, குடல், மூட்டுப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை உவைஸி அவரது சொந்த மருத்துவமனையிலிருந்து கேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய சகோதரரும், எம்.ஐ.எம்மின் தலைவருமான அஸாஸுத்தீன் உவைஸி, தனது சகோதரரின் நிலைமை ரொம்பவும் மோசமாக உள்ளதாகவும், அவருக்காக பிரார்த்திக்கவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்பருத்தீன் உவைஸி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்ட சூத்திரதாரியாக கருதப்படும் முஹம்மது பெல்வானை போலீஸார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment